என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
வாலிபரை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தேனி:
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி புதுப்பேட்டை காலனியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராமமூர்த்தி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






