சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர் மகா ராஜன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19). குருக்கள்பட்டி அருகே செல்லும்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊரைச் சேர்ந்தவர் மகா ராஜன். இவரது மகன் மகேந்திரன் (வயது 19). இவர் சம்பவத்தன்று இரவு சங்கரன்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேலநீலிதநல்லூர் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

குருக்கள்பட்டி அருகே செல்லும்போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலான்குளம் போலீ சார் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com