தேவாரத்தில் வீடு புகுந்து பணம் திருட்டு

தொழிலாளி வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் முத்து மனைவி செல்வி (37). கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2வது மகளுடன் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் வசித்து வருகிறார். தேவாரம் பஸ்நிலையத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com