தேனி அருகே நோய் கொடுமையால் 2 பேர் தற்கொலை

நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே உள்ள காமராஜர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பவளம் நாகராஜ் (வயது 84). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோம்பை ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் பாபுத்தாய் (56). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மூட்டு வலி காரணமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com