search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stole money"

    • தொழிலாளி வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் முத்து மனைவி செல்வி (37). கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2வது மகளுடன் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் வசித்து வருகிறார். தேவாரம் பஸ்நிலையத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சி அதிகாரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்
    • அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது

    திருச்சி:

    சேலம் குமரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 57). இவர் திருச்சி துவாக்குடி நீர் பாசன மேலாண்மை பயிற்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அவரது தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் அவசர அவசரமாக பஸ்சில் சேலம் புறப்பட்டுச் சென்றார். இந்த அவசரத்தில் ஏ.டி.எம். கார்டு இருந்த கைப்பையை அவர் தொலைத்து விட்டார்.

    பின்னர் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.30,000 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த போலீசார் திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மைய சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர்.

    இதில் அதிகாரிக்கு சொந்தமான ஏ.டி.எம். மூலம் ரூ.30,000 திருடிய திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர் மூன்றாவது தெரு பகுதி சேர்ந்த நாகராஜ் (46) என்பவரை கைது செய்தனர்.

    அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை கொள்ளையன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறான் என போலீசார் தெரிவித்தனர்.

    ×