என் மலர்
தேனி
- மலைச்சாலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- குடிநீர் குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை அருகே தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து தரைப்பகுதியான லோயர் கேம்ப் வரை 6கி.மீ தூரம் மலைச்சாலையாகும். எனவே தேக்கடியில் சுரங்க வாய்க்கால் அமைத்து அங்கிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைச்சரிவு வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய்களில் அதிக பட்சமாக 1800 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லலாம். இக்குழாய்கள் குமுளி மலைச்சலையின் 3 இடங்களில் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த குழாய்களை பார்ப்பதுடன் அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
இப்பகுதி பாலத்தின் தடுப்பு சுவர் தாழ்வாக இருப்பதால் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் இப்பகுதியில் நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் நிலையும் இருந்தது. இதனை தடுக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆரம்ப த்தில் உயரமாக இருந்த தடுப்புசுவர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சாலை பணியால் தாழ்வாக மாறிவிட்டது. குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதனையடுத்து இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 வாரத்தில் இப்பணிகள் நிறைவடையும் என்றனர்.
- எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
- எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எனவே எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- கடமலைக்குண்டு புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வந்து செல்வது இல்லை.
- தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்க கூடாது என நுழைவாயில் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வந்து செல்வது இல்லை. மேலும் பஸ் நிலையம் தனியார் ஆட்டோ, லாரி நிற்கும் இடமாக பயன்பட்டு வந்தது.
இதனால் பஸ் நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை அதிரடியாக வெளியேற்றினர். மேலும் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்க கூடாது என நுழைவாயில் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தனர்.
இந்நிலையில் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் ரெங்க ராஜன் துணைத்தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலர் சின்னச்சாமி உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உதவியோடு அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் அனுப்பினர்.
மேலும் அனைத்து நேரங்களிலும் பஸ் நிலை யத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என டிரைவர்க ளுக்கு அறிவுறுத்தினர். பல வருடங்களாக பயன்பாடின்றி இருந்த பேருந்து நிலையத்தை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகத்தினர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
- வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
- அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கைதிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
தேனி:
பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பெரியகுளம் சிறைச்சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் வருகை பதிவேடு, உள்வரும் மற்றும் வெளிசெல்லும் நபர்கள் குறித்த பதிவேடு, பார்வையாளர்கள் பதிவேடு, அலுவலர்கள் ஆய்வு பதிவேடு, தொகுதி பதிவேடு, கைதிகளின் அறை ஒதுக்கீடு பதிவேடு, காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கைதிகளுக்கு தயார்செய்யப்படும் உணவுக்கூடம், அடிப்படை வசதிகள், கைதிகளின் அறைகள் சுத்தமாவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவு தரமாக வழங்கப்படுகிறதா எனவும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுவது குறித்து கைதிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட வரும் பார்வையாளர்களிடம் சிறைச்சாலை போலீசார் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கெண்டார்.
- நோய்கொடுமையால் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா(63). மது குடிக்கும் பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஆனால் உடல்நலம் சீராகாததால் விரக்தியடைந்த ராஜா அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கண்டமனூர் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் சேர்மலை(45). விவசாயி. கடந்த சில மாதங்களாக நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தேனிமாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
- இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப் படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் மறு வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டிய லானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஷஜீவனா தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலானது உத்தமபாளையம், பெரியகுளம் வாக்காளர் பதிவு அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ங்களிலும், ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளை யம், போடி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலக ங்களிலும் மற்றும் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், நகராட்சி ஆணையர் அலுவகங்களில் பொதுமக்களின் பார்வை க்காக வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலு க்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் நடத்தப்படும். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 9-ந் தேதிக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சி யரிடம் தெரிவிக்கலாம்.
இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- காமன்கல்லூர் கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு வரையிலான வெள்ளிமலை சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
- எதிரெதிரே விலகி செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே காமன்கல்லூர் கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு வரையிலான வெள்ளிமலை சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து காமன்கல்லூர்- கடமலைக்குண்டு இடையே புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கியது. அதில் சாலையின் இருபுறமும் மணல் கரைகள் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலையின் சில இடங்களில் மணல் கரைகள் அமைக்கப்படவில்லை.
எனவே அந்த பகுதியில் எதிரெதிரே விலகி செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் விடுபட்டுள்ள இடங்களில் மண் கரைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
- பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொட்டக்குடி ஆகியவை மூலம் அணைக்கு தண்ணீர் வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. வைகை அணையில் இருந்து செப்டம்பர் மாதம் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு முதல் மற்றும் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது வைகை அணையின் நீர் மட்டம் 58.14 அடியாக உயர்ந்து ள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு 1445 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.65 அடியாக உள்ளது. 1189 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1322 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 123.98 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- தொழிற்கடன் வழங்கும் முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
- மொத்தம் 427 நபர்களுக்கு ரூ.68.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் மூலம் புதிய தொழில் தொடங்கு வதற்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காகவும் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கி பேசியதாவது:-
மாவட்ட அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்ப தற்காகவும் தொழில் வளத்தை மேம்படுத்து வதற்காகவும் தொழிற்கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய முற்படும்போது, தொழிலை பற்றிய முழு புரிதல் இருப்பதுடன், வங்கி கடனை திரும்ப செலுத்துவ திலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தொழில் முனைவோரால் மட்டுமே சமுதாயத்தில் வேலைவாய்ப்பினை பிறருக்கு வழங்கி அவர்க ளின் வாழ்வதாரத்தினை உயர்த்த முடியும்.
மேலும் தேனி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழி ல்களை ஊக்குவிப்பதற்காக ஜுலை மாதம் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் முகாமில் 244 நபர்களுக்கு ரூ.38.44 கோடி மதிப்பிலான கடனுதவியும், இந்த முகாமில் 183 நபர்களுக்கு ரூ.30.07 கோடி மதிப்பிலான கடனுதவிகள் என இதுவரை மொத்தம் 427 நபர்களுக்கு ரூ.68.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
- அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி, அக்.19-
தேனி மாவட்டம் நாகலா புரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி(65). இவரது மனைவி இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






