என் மலர்
நீங்கள் தேடியது "Tourists are excited"
- மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல்மழையுடன் இதமான வெயிலும் அடித்தது. இந்த வித்தியாசமான சீதோஷ்ணத்தை சுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகமாக வலம் வந்தனர்.
- நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்ததால் சிறுவியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த வார தொடக்கத்தில் கனமழை பெய்ததால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கனமழைக்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதனால் சுற்றுலா பயணிகள் குறைவாகவே இருந்தது.
இந்தநிலையில் வார இறுதி நாட்களில் சாரல் மழையுடன் இதமான சீேதாஷ்ணம் நிலவி வருகிறது. இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல்மழையுடன் இதமான வெயிலும் அடித்தது. இந்த வித்தியாசமான சீதோஷ்ணத்தைசுற்றுலா பயணிகள் அனுபவித்து உற்சாகமாக வலம் வந்தனர்.
குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளிநீர்வீழ்ச்சி, குணாகுகை, மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டுரசித்தனர்.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரியும், ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு அதிகரித்ததால் சிறுவியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நேற்று இரவுவரை பரவலாக மழை பெய்ததால் இதமான சீதோசனம் நிலவியுள்ளது.
- சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி என மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடை க்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதமான சீதோசனமும், கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களும், தலை முட்டும் மேகமூட்டமும் காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்து இயற்கை எழில்கொஞ்சும் சூழலை அனுபவித்து ரசிக்கின்றனர்.
மேலும் சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாதோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் காண ப்பட்டனர். செண்பகனூர், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், சின்னபள்ளம், பிரகாசபுரம், பெரும்பள்ளம், குருசடிமெத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவுவரை பரவலாக மழை பெய்ததால் இன்று இதமான சீதோசனம் நிலவியுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டகானல் அருவி, பாம்பார் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி என மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். தற்போது கொடை க்கானலில் பெய்துவரும் சார ல்மழையால் குளுமையான சீதோசன நிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் இன்று விடுமுறை நாளாக இருப்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.
- யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
கூடலூர்:
சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுது போக்கு அம்ச ங்கள் உள்ளன. படகு சவாரியின் போது நீர் நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணலாம்.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385. நுழைவு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.25 அடியாக குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரைப்பகுதிக்கு வருகின்றன.
இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி படகுத்துறை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக் கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. யானைகள் கூட்டம் கூட்டமாக வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
மேலும் இது போன்ற வன விலங்குகள் மற்றும் பறவைக் கூட்டங்களை படகு சவாரியின் போது காண்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது என அவர்கள் தெரிவித்தனர்.
- தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- தொடர் விடு முறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காண ப்பட்டது.
- நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவ ரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டு மின்றி வெளி நாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. தற்போது மேகமூட்டத்துடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தொடர் விடு முறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காண ப்பட்டது.
தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக மேல்மலை கிரா மங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளை விக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வ மாக வாங்கி சென்றனர்.சுற்றுலா பயணி களின் வருகை அதிக மாக இருந்த காரண த்தினால் வாகன போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்னும் சில நாட்கள் சுற்றுலா பயணி களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.
- ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.
- சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர். கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்ததால் மயிலாடும்பாறை போலீசார் மற்றும் மேகமலை வனவர் கள் ஈஸ்வரன், செல்வகுமரேசன் மற்றும் சட்டவனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே வனத்துறை சோதனை சாவடி அமைத்துள்ள இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். எனவே சோதனை சாவடியில் இருந்து அருவி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருவி வரை வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் அல்லது பெண்கள், வயதானவர்கள் வசதிக்காக வனத்துறையினர் சார்பில் சோதனை சாவடியில் இருந்து அருவி வரை வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- சீசன் முடிந்தும் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொடர்ந்து பூத்துக் குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா நடத்தப்பட்டு மலர் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் கோடைவிழா நடத்தப்படாத நிலையில் இந்த வருடம் நடைபெற்றது.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்று பூத்து குலுங்கிய வண்ணமலர்களை கண்டுரசித்தும், விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுச்சென்றனர். கோடைவிழா நிறைவடைந்து 2 மாதங்கள் கடந்தும் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் தொடர்ந்து பூத்துக் குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.
டெல்பினிம், சால்வியா, டேலியா, சிங்க முகப்பூக்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மலர் வகைகள் பூத்துக் குலுங்குகின்றன.கோடைகால விடுமுறை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததாக இல்லை. சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல்மழையும் விட்டுவிட்டு கனமழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
அவர்கள் பிரையண்ட் பூங்கா மட்டுமின்றி, ஏரியில் படகுசவாரி செய்தும், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதனால் உள்ளூர் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலங்களில் வியாபாரத்தில் மிகவும் நஷ்டம் அடைந்திருந்த வியாபாரிகள் தற்போது அந்த நிலையில் இருந்து சற்று விடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பிரையண்ட் பூங்காவில் தொடர்ந்து அவ்வப்போது மலர்களை கவாத்து செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் இடைக்கால சீசனிலும் இன்னும் பல வகையான மலர்கள் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பூத்துக் குலுங்கும் என பூங்கா அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.






