என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமதளமின்றி தார் சாலை"

    • காமன்கல்லூர் கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு வரையிலான வெள்ளிமலை சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
    • எதிரெதிரே விலகி செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே காமன்கல்லூர் கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு வரையிலான வெள்ளிமலை சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

    வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து காமன்கல்லூர்- கடமலைக்குண்டு இடையே புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கியது. அதில் சாலையின் இருபுறமும் மணல் கரைகள் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலையின் சில இடங்களில் மணல் கரைகள் அமைக்கப்படவில்லை.

    எனவே அந்த பகுதியில் எதிரெதிரே விலகி செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் விடுபட்டுள்ள இடங்களில் மண் கரைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×