search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர்பட்டியல் 27-ந் தேதி வெளியீடு
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர்பட்டியல் 27-ந் தேதி வெளியீடு

    • தேனிமாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
    • இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப் படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் மறு வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டிய லானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஷஜீவனா தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற 27-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

    மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலானது உத்தமபாளையம், பெரியகுளம் வாக்காளர் பதிவு அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ங்களிலும், ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளை யம், போடி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் அலுவலக ங்களிலும் மற்றும் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், நகராட்சி ஆணையர் அலுவகங்களில் பொதுமக்களின் பார்வை க்காக வைக்கப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலு க்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் நடத்தப்படும். வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 9-ந் தேதிக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சி யரிடம் தெரிவிக்கலாம்.

    இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×