என் மலர்tooltip icon

    தேனி

    • ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை அரசு பஸ் முன்பு நிறுத்தி விட்டு குடிபோதையில் பஸ்சுக்குள் ஏறினார்.
    • பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அங்கிருந்து அப்புற ப்படு த்தினர்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் பிச்சைகுமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பெரிய குளத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். தேவதானப்பட்டி தனியார் கல்லூரி அருகே வந்த போது வேல்நகரை சேர்ந்த கணேசன் மகன் திலீபன் (22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை அரசு பஸ் முன்பு நிறுத்தி விட்டு குடிபோதையில் பஸ்சுக்குள் ஏறினார்.

    மேலும் டிரைவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்க முயன்றார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அங்கிருந்து அப்புற ப்படு த்தினர். இதுகுறித்து தேவதான ப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனை கைது செய்தனர்.

    • கோவிந்தன்பட்டியை சேர்ந்த மாணவன் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே கோவிந்த ன்பட்டியை சேர்ந்தவர் மார்டின் (16). இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நி லையில் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. மாண வனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தம பாளையம் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே அழகர்சாமி புரத்தை சேர்ந்தவர் ஹமீதா (37). டெய்லர். சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன.
    • இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    கம்பம்:

    தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன. இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்தவாசன் மற்றும் செயலர் சுகன்யா காந்தவாசன், பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் உதவி முதல்வர் லோகநாதன் மற்றும் யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர்களும் பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினர். 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவில் ரித்திக்ஷா, தன்யா, ஹாஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    அமர்ந்த நிலை பிரிவில் ரூபியா, அகல்யா, தேவஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 8 முதல் 11 வயது பிரிவில் சர்வின், சந்தோஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். பேலன்ஸ் பிரிவில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் தருண், வர்ஷன், விபின் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    • தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டம் படிப்படி யாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியே ற்றப்பட்டது. இதன்கார ணமாக வைகை அணையின் நீர்மட்டமும் 60 அடியை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.75 அடியாக உள்ளது. வரத்து 1869 கன அடி. நேற்றுவரை 1322 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3371 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது. வரத்து 1355 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3692 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 65 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 413.15 மி.கன அடி. சோத்தப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியது இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 99 மி.கன அடி.

    பெரியாறு 21.4, தேக்கடி 22.4, கூடலூர் 21, உத்த மபாளையம் 20, சண்முகாநதி அணை 18.4, போடி 5.4, வீரபாண்டி 13.6, சோத்துப்பாறை 1 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    • 12 ஆண்டுகளுக்கு பின்பு ரெயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை ப்பொருட்கள் கொண்டுவ ரப்பட்டுள்ளது.
    • லாரி களில் குடிமை ப்பொரு ட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதை அமைத்த பிறகு முதன் முறையாக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெ லுங்கான மாநிலத்திலிருந்து குடிமைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் கிட்டங்கி களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு குடிமைப்பொருட்கள் இதுநாள் வரை திண்டுக்கல் மாவ ட்டத்திலிருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட த்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 8000 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலம் வாராங்கால் மாவட்டம் சுங்கன்பாத் ரெயில் நிலையத்திலிருந்து 21 பெட்டிகளில் 1326 டன் அரிசி 26,436 மூட்டைகள் ஏற்றிக்கொண்டு தேனி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

    12 ஆண்டுகளுக்கு பின்பு ரெயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை ப்பொருட்கள் கொண்டுவ ரப்பட்டுள்ளது. ரெயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிமை ப்பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, தேனி ஆகிய 5 நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். லாரி களில் குடிமை ப்பொரு ட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக பொது மேலாளர் (போக்குவரத்து) ஹரிகுமார், தென்னக ரயில்வே துணை வணிக மேலாளர் மணி வண்ணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.
    • சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர். கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்ததால் மயிலாடும்பாறை போலீசார் மற்றும் மேகமலை வனவர் கள் ஈஸ்வரன், செல்வகுமரேசன் மற்றும் சட்டவனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே வனத்துறை சோதனை சாவடி அமைத்துள்ள இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். எனவே சோதனை சாவடியில் இருந்து அருவி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருவி வரை வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் அல்லது பெண்கள், வயதானவர்கள் வசதிக்காக வனத்துறையினர் சார்பில் சோதனை சாவடியில் இருந்து அருவி வரை வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.
    • இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது29). இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கில் வந்துள்ளார்.
    • இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு இப்ராஹிம் உடன் பைக்கில் வந்துள்ளார். வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இப்ராஹிம் சென்றுள்ளார்.

    இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசில் இப்ராஹிம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில சம்பவத்தன்று அருகில் உள்ளஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்ற போது, கடையில் இருந்த செல்போனை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டு விஷேசத்தில் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்.
    • சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன ்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன் (வயது49). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேனி கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    மது பழக்கம் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டு விஷேசத்தில் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் உதவி செய்த பின்னர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தேனி அருகே உள்ள வீரபா ண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளர்கள் மதளை செந்தில்குமார், கோகுல் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி, தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் வரவேற்றார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட தி.மு.க. நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீட் விலக்கு கோரும் தபால் அட்டையை ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக அனுப்ப கையெழுத்து அட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் கலைஞர் பெற்று தந்த உரிமைகள், மாணவர் நலனில் கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் கலைஞர் காத்த மனிதநேயம், கலைஞர் ஆட்சியில் கல்வி புரட்சி, ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலைஞர், பெரியார் அண்ணா வழியில் கலைஞர் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதேபோல கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வள்ளுவம் போற்றிய கலைஞர், திராவிடத்தின் எழுச்சி கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் இந்திய ஜனநாயகத்தில் கலைஞர் பங்கு, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர், மகளிர் மாண்பு காத்த கலைஞர், கலைஞரும் சுயமரியாதையும் என்ற தலைப்புகளில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தலைமை ஆசிரியர் இளம்பரிதி, பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, முதுகலை ஆசிரியர்கள் முத்துக்குமார், செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வீரபாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
    • இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.35 அடியாக உள்ளது. 1366 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 754 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1322 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 126.28 அடிஉயரம் கொண்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் 125.39 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நகையை திருப்பி தராததால் கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
    • குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணன் மனைவி தேவி (வயது48). இவர்கள் சொந்த தேவைக்காக நகையை அடகு வைத்துள்ளனர். அந்த நகையை திருப்பி தராததால் கணவருடன் தேவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் நகை திருப்புவது குறித்து அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துக்கண்ணன் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பியபோது தேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் தேவியின் இறப்பு குறித்து தெரிய வரும். இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×