தேனி அருகே பள்ளி மாணவன் உள்பட 2 பேர் மாயம்

கோவிந்தன்பட்டியை சேர்ந்த மாணவன் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

உத்தமபாளையம் அருகே கோவிந்த ன்பட்டியை சேர்ந்தவர் மார்டின் (16). இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நி லையில் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. மாண வனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தம பாளையம் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் அருகே அழகர்சாமி புரத்தை சேர்ந்தவர் ஹமீதா (37). டெய்லர். சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com