பெரியகுளம் அருகே நூதன முறையில் பைக், செல்போன் திருட்டு

சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கில் வந்துள்ளார். இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு இப்ராஹிம் உடன் பைக்கில் வந்துள்ளார். வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இப்ராஹிம் சென்றுள்ளார்.

இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசில் இப்ராஹிம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில சம்பவத்தன்று அருகில் உள்ளஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்ற போது, கடையில் இருந்த செல்போனை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com