search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Essay and speech competition"

    • பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தேனி அருகே உள்ள வீரபா ண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளர்கள் மதளை செந்தில்குமார், கோகுல் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி, தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் வரவேற்றார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட தி.மு.க. நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீட் விலக்கு கோரும் தபால் அட்டையை ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக அனுப்ப கையெழுத்து அட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் கலைஞர் பெற்று தந்த உரிமைகள், மாணவர் நலனில் கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் கலைஞர் காத்த மனிதநேயம், கலைஞர் ஆட்சியில் கல்வி புரட்சி, ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலைஞர், பெரியார் அண்ணா வழியில் கலைஞர் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதேபோல கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வள்ளுவம் போற்றிய கலைஞர், திராவிடத்தின் எழுச்சி கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் இந்திய ஜனநாயகத்தில் கலைஞர் பங்கு, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர், மகளிர் மாண்பு காத்த கலைஞர், கலைஞரும் சுயமரியாதையும் என்ற தலைப்புகளில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தலைமை ஆசிரியர் இளம்பரிதி, பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, முதுகலை ஆசிரியர்கள் முத்துக்குமார், செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வீரபாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    ×