என் மலர்
தேனி
- நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல.
- அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் தங்கபாண்டி(19). இவர் வீரபாண்டி அரசு கலை க்கல்லூரியில் பி.ஏ. முத லாம்ஆண்டு படித்து வரு கிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வீரபாண்டி போலீ சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாண வனை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் மனைவி பூங்கோதை(23). இவர் தனது மனைவியை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பூங்கோதை மாயமாகி இருந்தார். இதுகுறித்து பாட்டி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பூங்கோதையை தேடி வருகின்றனர்.
- தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
- ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
இதன் அருகே போலீஸ் நிலையம், ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். அலுவலகத்திற்கு வரும் அறநிலையத்துறை அதிகாரி களும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
- சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே சந்திராபுரம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் அடைக்கண்(52). இவர் தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அடைக்கண் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அடைக்கண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
- இன்று காலை முதல் 1333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3410 மி.கன அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படுவதுடன் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
அணைகளின் நீர் மட்டம் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.95 அடியாக உள்ளது. வரத்து 1617 கன அடி. நேற்று 700 கன அடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3410 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 61.02 அடியாக உள்ளது. வரத்து 1379 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3802 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.70 அடி. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 409 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியாக உள்ளது. இதனால் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து 123 கன அடி. திறப்பு 97 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
பெரியாறு 20, தேக்கடி 20, கூடலூர் 20.4, உத்தமபாளையம் 12.6, சண்முகாநதி அணை 4.6, போடி 51.8, சோத்துப்பாறை 31, வீரபாண்டி 18.4, அரண்மனைபுதூர் 16.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் ஊர்ந்து சென்றது.
- இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடியில் நேற்றிரவு சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் ஊர்ந்து சென்றது.
இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்ததை கண்டனர். பாம்பை பிடித்து போடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர்.
வனஅலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பாம்பை விட்டனர்.
- கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தேனி:
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள், பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபகணேஷ், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்த யசோதா மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் ஆகியோர் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
மேலும் தங்கள் தொழிலுக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும் அதனை கொடுத்தால் மாதம் ரூ.2 லட்சம் வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கணேசன் மற்றும் அவரது தந்தை சுந்தர் ராஜ் ஆகியோர் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த வருடம் கொடுத்தனர்.
ஒரு சில மாதங்கள் மட்டுமே வட்டித் தொகைையை வங்கி கணக்கல் செலுத்தி வந்த யசோதா அதன் பிறகு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. நேரடியாக சென்று கேட்ட போது பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்தவர் மாயமானார்.
- அவரது குடும்பத்தினர் குழந்தையம்மாளை தேடி வந்தனர்.
சின்னமனூர்:
சின்னமனூரை சேர்ந்தவர் சந்தானம் மனைவி குழந்தையம்மாள்(75). மகள் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார்.
அவரது குடும்பத்தினர் குழந்தையம்மாளை தேடி வந்தனர். சம்பவத்தன்று துரைச்சாமிபுரம் முல்லைபெரியாறு அருகே உள்ள அரசமரபாறை பகுதியில் பிணமாக கிடந்த அவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார்.
- அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
மேலசொக்கநாதபுரம்:
போடியில் விஜய தசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
போடி வள்ளுவர் சிலை அருகில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையும் பிரசித்தியும் பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார். அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருமலாபுரம் அருகே அமைந்துள்ள சவுடாம்பிகை கோவிலில் அம்மனுக்கு அன்னை சாரதாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் உற்சவ அம்மன் சிலைக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு மகிஷாசூரவர்த்தினியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
போடி அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கும், சிவலிங்கத்திற்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிம்மவாகினியாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த கோவிலில் இளம் பெண்களுக்கு சப்த கன்னியர் போல அலங்காரம் செய்யப்பட்டு கன்னிமார்கள் அமரச் செய்து சுமங்கலிப் பெண்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
அனைத்து கோவில்களிலும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.
- முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கம்பம்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.
தேக்கடியில் இருந்து கூடலூர் வழியாக இன்று காலை லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மணிமண்டபத்தையும் சுற்றி பார்த்தார்.
அதனை தொடர்ந்து கார் மூலம் கம்பம் நடராஜன் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கம்பத்தில் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.
இதனை தொடர்ந்து கம்பம் பாவலர் படிப்பகம் அருகே மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து வீரபாண்டியில் போடேந்திரபுரம் விளக்கு பகுதியில் உள்ள மைதானத்தில் தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்பு முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இன்று பிற்பகலில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய அங்காடியை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்து ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து தேனி என்.ஆர்.டி. நகரில் நூலகத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேனி மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் அன்பில் மகேசும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் பார்வையிட்டார்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தேனிக்கு வந்தார். முன்னதாக லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரத்தை கேட்டறிந்தார். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டறிந்தார்.
மாணவர்களின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டு அங்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். மாணவர்களையும் தனியாக வரவழைத்து அவர்களிடம் தரமான கல்வி அளிக்கப்படுகிறதா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அமைச்சர் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசு பள்ளிக்குள் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை தேனி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.
- நாளை காலை 10 மணிக்கு கம்பம் வரும் அமைச்சர் உதயநிதி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கம்பம்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை தேனி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.
நாளை காலை 10 மணிக்கு கம்பம் நடராஜன் திருமண மண்டபத்துக்கு வரும் அமைச்சர் உதயநிதி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் வாசக சாலையை திறந்து வைக்கிறார்.
கம்பத்தில் இருந்து தேனிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி அங்கு நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு அரசு விருந்தினர் இல்லத்துக்கு செல்கிறார். மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி குறித்து கலந்துரையாடுகிறார்.
தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.






