கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மாயம்

நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் தங்கபாண்டி(19). இவர் வீரபாண்டி அரசு கலை க்கல்லூரியில் பி.ஏ. முத லாம்ஆண்டு படித்து வரு கிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வீரபாண்டி போலீ சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாண வனை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் மனைவி பூங்கோதை(23). இவர் தனது மனைவியை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பூங்கோதை மாயமாகி இருந்தார். இதுகுறித்து பாட்டி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பூங்கோதையை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com