தேவதானப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி

தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே சந்திராபுரம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் அடைக்கண்(52). இவர் தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அடைக்கண் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அடைக்கண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com