என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS. 20 LAKH FRAUD"

    • ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
    • இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்த யசோதா மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் ஆகியோர் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

    மேலும் தங்கள் தொழிலுக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும் அதனை கொடுத்தால் மாதம் ரூ.2 லட்சம் வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கணேசன் மற்றும் அவரது தந்தை சுந்தர் ராஜ் ஆகியோர் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த வருடம் கொடுத்தனர்.

    ஒரு சில மாதங்கள் மட்டுமே வட்டித் தொகைையை வங்கி கணக்கல் செலுத்தி வந்த யசோதா அதன் பிறகு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. நேரடியாக சென்று கேட்ட போது பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.3 கோடி கடன் பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.
    • ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்றதாக தெரிகிறது.

    கோவை,

    கோவை போத்தனூர் சாரதாமில் ரோட்டை சேர்ந்தவர் சவுகத்(54), கராத்தே மாஸ்டர். இவர் தனது வீட்டு ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.

    அப்போது, அவருக்கு தென்காசியை சேர்ந்த நாகூர் மீரான்(57) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து 5 சதவீதம் கமிஷனுக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகூர் மீரான் தெரிவித்தார்.

    மேலும், சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு கட்டங்களாக ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்றதாக தெரிகிறது. ஆனால், அதன் பின்னரும், ரூ.3 கோடி கடன் தொகை பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை நாகூர் மீரான் செய்யாமல் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சவுகத், தென்காசி சென்று நாகூர் மீரானிடம் கடன் தொகை பெற்று தருமாறும், இல்லையென்றால் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனால், நாகூர் மீரான் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சவுகத் போத்தனூர் போலீசில் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இருபிரிவுகளின் கீழ் நாகூர் மீரான், அவரது நண்பர் ஜான் ஆகிய 2 மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுந்தரராஜ் (வயது 74). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவர் தனது மகனுக்கு அரசு வேலையை எதிர்பார்த்து இருந்தனர்
    • இதை தெரிந்து கொண்ட துறையூர் பச்சை பெருமாள்பட்டி குடில் ரோடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவா என்கிற சிவப்பிரகாசம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜை 2016 ஆண்டில் சந்தித்தார்.

    திருச்சி,

    துறையூர் சோபனாபுரம் ஈ.வி.ஆர். தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 74). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவருக்கு மாதவன் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து இருந்தனர். இதை மோப்பம் பிடித்த துறையூர் பச்சை பெருமாள்பட்டி குடில் ரோடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவா என்கிற சிவப்பிரகாசம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜை 2016 ஆண்டில் சந்தித்தார்.

    பின்னர் அவரிடம் பணம் கொடுத்தால் உங்கள் மகனுக்கும், மகளுக்கும் வேலை ரெடியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சி பிரபலங்களுடன் சிவா என்கிற சிவப்பிரகாசம் தொடர்பில் இருந்தார்.

    இதனால் அவரை நம்பிய சுந்தரராஜ் தனது மகன் மாதவன் மற்றும் மகளுக்கு வேலை வாங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், பின்னர் பல்வேறு தவணையாக ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சிவப்பிரகாசம் மாதவனுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு பணி நியமன ஆணையினை வழங்கியதாக தெரிகிறது. பின்னர் அது போலி பணி ஆணை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சுந்தரராஜ் துறையூர் போலீசில் தற்போது புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, புகார்தாரர் 2016 ஏப்ரல் 9-ந்தேதி பணம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் 7 வருடத்திற்கு பின்பு இப்போதுதான் புகார் அளித்துள்ளார். சிவப்பிரகாசத்திடம் விசாரித்த போது பணத்தை திருப்பி கொடுத்ததாகவும், போலி பணி நியமன ஆணை எதுவும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் தான் உண்மை தெரியும் என்றனர்.

    ×