என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கராத்தே மாஸ்டரிடம் ரூ.20 லட்சம் மோசடி
- ரூ.3 கோடி கடன் பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.
- ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்றதாக தெரிகிறது.
கோவை,
கோவை போத்தனூர் சாரதாமில் ரோட்டை சேர்ந்தவர் சவுகத்(54), கராத்தே மாஸ்டர். இவர் தனது வீட்டு ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.
அப்போது, அவருக்கு தென்காசியை சேர்ந்த நாகூர் மீரான்(57) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து 5 சதவீதம் கமிஷனுக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகூர் மீரான் தெரிவித்தார்.
மேலும், சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு கட்டங்களாக ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்றதாக தெரிகிறது. ஆனால், அதன் பின்னரும், ரூ.3 கோடி கடன் தொகை பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை நாகூர் மீரான் செய்யாமல் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சவுகத், தென்காசி சென்று நாகூர் மீரானிடம் கடன் தொகை பெற்று தருமாறும், இல்லையென்றால் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், நாகூர் மீரான் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சவுகத் போத்தனூர் போலீசில் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இருபிரிவுகளின் கீழ் நாகூர் மீரான், அவரது நண்பர் ஜான் ஆகிய 2 மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






