என் மலர்tooltip icon

    தேனி

    • சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் ஊர்ந்து சென்றது.
    • இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் நேற்றிரவு சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் போடி-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு இரையை விழுங்கிய நிலையில் ஊர்ந்து சென்றது.

    இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்ததை கண்டனர். பாம்பை பிடித்து போடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர்.

    வனஅலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பாம்பை விட்டனர்.

    • கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள், பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபகணேஷ், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
    • இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்த யசோதா மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் ஆகியோர் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

    மேலும் தங்கள் தொழிலுக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும் அதனை கொடுத்தால் மாதம் ரூ.2 லட்சம் வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கணேசன் மற்றும் அவரது தந்தை சுந்தர் ராஜ் ஆகியோர் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த வருடம் கொடுத்தனர்.

    ஒரு சில மாதங்கள் மட்டுமே வட்டித் தொகைையை வங்கி கணக்கல் செலுத்தி வந்த யசோதா அதன் பிறகு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. நேரடியாக சென்று கேட்ட போது பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்தவர் மாயமானார்.
    • அவரது குடும்பத்தினர் குழந்தையம்மாளை தேடி வந்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் சந்தானம் மனைவி குழந்தையம்மாள்(75). மகள் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார்.

    அவரது குடும்பத்தினர் குழந்தையம்மாளை தேடி வந்தனர். சம்பவத்தன்று துரைச்சாமிபுரம் முல்லைபெரியாறு அருகே உள்ள அரசமரபாறை பகுதியில் பிணமாக கிடந்த அவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார்.
    • அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் விஜய தசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    போடி வள்ளுவர் சிலை அருகில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையும் பிரசித்தியும் பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார். அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருமலாபுரம் அருகே அமைந்துள்ள சவுடாம்பிகை கோவிலில் அம்மனுக்கு அன்னை சாரதாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் உற்சவ அம்மன் சிலைக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு மகிஷாசூரவர்த்தினியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    போடி அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கும், சிவலிங்கத்திற்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிம்மவாகினியாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த கோவிலில் இளம் பெண்களுக்கு சப்த கன்னியர் போல அலங்காரம் செய்யப்பட்டு கன்னிமார்கள் அமரச் செய்து சுமங்கலிப் பெண்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    அனைத்து கோவில்களிலும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.
    • முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    கம்பம்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.

    தேக்கடியில் இருந்து கூடலூர் வழியாக இன்று காலை லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மணிமண்டபத்தையும் சுற்றி பார்த்தார்.

    அதனை தொடர்ந்து கார் மூலம் கம்பம் நடராஜன் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கம்பத்தில் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கம்பம் பாவலர் படிப்பகம் அருகே மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து வீரபாண்டியில் போடேந்திரபுரம் விளக்கு பகுதியில் உள்ள மைதானத்தில் தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்பு முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இன்று பிற்பகலில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய அங்காடியை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்து ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து தேனி என்.ஆர்.டி. நகரில் நூலகத்தையும் திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தேனி மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் அன்பில் மகேசும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் பார்வையிட்டார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தேனிக்கு வந்தார். முன்னதாக லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரத்தை கேட்டறிந்தார். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டறிந்தார்.

    மாணவர்களின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டு அங்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். மாணவர்களையும் தனியாக வரவழைத்து அவர்களிடம் தரமான கல்வி அளிக்கப்படுகிறதா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அமைச்சர் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசு பள்ளிக்குள் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை தேனி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.
    • நாளை காலை 10 மணிக்கு கம்பம் வரும் அமைச்சர் உதயநிதி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    கம்பம்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை தேனி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.

    நாளை காலை 10 மணிக்கு கம்பம் நடராஜன் திருமண மண்டபத்துக்கு வரும் அமைச்சர் உதயநிதி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் வாசக சாலையை திறந்து வைக்கிறார்.

    கம்பத்தில் இருந்து தேனிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி அங்கு நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு அரசு விருந்தினர் இல்லத்துக்கு செல்கிறார். மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி குறித்து கலந்துரையாடுகிறார்.

    தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    • ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை அரசு பஸ் முன்பு நிறுத்தி விட்டு குடிபோதையில் பஸ்சுக்குள் ஏறினார்.
    • பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அங்கிருந்து அப்புற ப்படு த்தினர்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் பிச்சைகுமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பெரிய குளத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். தேவதானப்பட்டி தனியார் கல்லூரி அருகே வந்த போது வேல்நகரை சேர்ந்த கணேசன் மகன் திலீபன் (22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை அரசு பஸ் முன்பு நிறுத்தி விட்டு குடிபோதையில் பஸ்சுக்குள் ஏறினார்.

    மேலும் டிரைவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்க முயன்றார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அங்கிருந்து அப்புற ப்படு த்தினர். இதுகுறித்து தேவதான ப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனை கைது செய்தனர்.

    • கோவிந்தன்பட்டியை சேர்ந்த மாணவன் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே கோவிந்த ன்பட்டியை சேர்ந்தவர் மார்டின் (16). இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நி லையில் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. மாண வனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தம பாளையம் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே அழகர்சாமி புரத்தை சேர்ந்தவர் ஹமீதா (37). டெய்லர். சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன.
    • இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    கம்பம்:

    தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன. இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்தவாசன் மற்றும் செயலர் சுகன்யா காந்தவாசன், பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் உதவி முதல்வர் லோகநாதன் மற்றும் யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர்களும் பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினர். 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவில் ரித்திக்ஷா, தன்யா, ஹாஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    அமர்ந்த நிலை பிரிவில் ரூபியா, அகல்யா, தேவஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 8 முதல் 11 வயது பிரிவில் சர்வின், சந்தோஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். பேலன்ஸ் பிரிவில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் தருண், வர்ஷன், விபின் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    • தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டம் படிப்படி யாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியே ற்றப்பட்டது. இதன்கார ணமாக வைகை அணையின் நீர்மட்டமும் 60 அடியை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரு ம்பாலான அணைகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.75 அடியாக உள்ளது. வரத்து 1869 கன அடி. நேற்றுவரை 1322 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3371 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது. வரத்து 1355 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3692 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 65 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 413.15 மி.கன அடி. சோத்தப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியது இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 99 மி.கன அடி.

    பெரியாறு 21.4, தேக்கடி 22.4, கூடலூர் 21, உத்த மபாளையம் 20, சண்முகாநதி அணை 18.4, போடி 5.4, வீரபாண்டி 13.6, சோத்துப்பாறை 1 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    ×