என் மலர்
நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர் தற்கொலை"
- கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனும் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்தார்.
- இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் விஷம்குடித்து மயங்கினார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே அப்பிபட்டியை சேர்ந்தவர் பகவதி மனைவி பஞ்சவர்ணம்(60). இவர் எரசை பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனும் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்தார்.
அவரது மகள் புஷ்பம் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் விஷம்குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






