என் மலர்
தேனி
- வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்.
- உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பொன்னம்பலம்-வனிதா தம்பதியின் மகன் அபினவ்யஸ்வந்த்(15). இவர் தேவதானப்பட்டியில் கல்வி சர்வதேச பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரதமரால் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக "பரிக்ஷாபே சச்சா 2023" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டியில் கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரையை பாராட்டி பிரதமர் நரேந்திரமோடி மாணவனுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
உங்களை போன்ற இன்றைய தலைமுறை மாணவர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறமைகளை பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் அடைகிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பிச்சைகனி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
சின்னமனூர்:
சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி அமைக்கும் பணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பிச்சைகனி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மதிவாணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- பின்னர் பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கம்பம்:
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி லோயர்கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆதிவாசி மாணவ-மாணவிகள் வருகையை ஆய்வு செய்தார்.பின்னர் கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்போது கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அமைச்சரிடம் கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். இதில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேனி மாவட்டம் கம்பத்தில் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 1, 100 பேர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
- பெரியார், அண்ணா, கலைஞர் ஆகி யோரை உங்கள் வடிவில் பார்க்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள் 1, 100 பேர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.கம்பம் நகர தி.மு.க. (வடக்கு) செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார். நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த உறுப்பினர்க ளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழி வழங்கி பேசியதாவது:-
அமைச்சராக பொறு ப்பேற்று தேனி மாவட்ட த்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் மூத்த உறுப்பின ர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட ங்களில் சுற்றுப்பயணம் செய்து ரூ.40 கோடி வரை பொற்கிழி வழங்கியு ள்ளோம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகி யோரை உங்கள் வடிவில் பார்க்கிறேன். வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது.
இதற்கு நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேர்தல் பணிக்குழு உறுப்பினர் செல்வேந்திரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கம்பம் பாவலர் படிப்பகம் அருகே தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டி ருந்த மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தையும் திறந்து வைத்தார்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
- தற்போது வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலை இடுக்கி மாவட்டம், தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது.
தற்போது வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 61.78 அடி நீர்மட்டம் இருந்தது. விரைவில் 62 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1820 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.25 அடியாக உள்ளது. 2033 கனஅடிநீர் வருகிறது. 1333 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 36 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 60.4, தேக்கடி 2.4, சண்முகாநதிஅணை 1.2, வைகை அணை 7, மஞ்சளாறு 4.1, பெரியகுளம் 17 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- மின்வயரை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.
- படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கூடலூர்:
கூடலூர் கர்ணம் பழனிவேல்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் கேசவன்(45). இவர் சுருளிபட்டி மின்வாரியத்தில் வயர்மேனாக வேலைபார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த மூக்கம்மாள் என்பவரது வீட்டிற்கு மின்சப்ளை வரவில்லை.
இதனை சரிபார்க்க கேசவன் சென்றார். மின்வயரை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் வழியிலேயே கேசவன் இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- அப்போது வழியில் நின்றிருந்த பைக் மீது மோதினார்.
சின்னமனூர்:
சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்(24). இவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த அருண் என்பவரது பைக் மீது மோதினார். இதனால் ஆத்திரமடைந்த அருண் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேசை தாக்கினர்.
இதனை தடுக்க வந்த ராஜேசின் தாய் செல்வியையும் கடுமையாக தாக்கி வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடி உள்ளனர். காயமடைந்த ராஜேஸ் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது வெங்காயத்திற்கு போதிய விலை கிடைப்பதால் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- 65 நாட்கள் பயிரான வெங்காயம் கடந்த வருடம் விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை அதிகரித்தது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் வீரபாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, மலர்கள், விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி பயிராக வெங்காயமும் அதிகளவில் பயிரிடப்பட்டு ள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து விதை வெங்காயம் வாங்கி விதைப்பு பணி நடைபெற்று வந்தது. தற்போது வெங்காயத்திற்கு போதிய விலை கிடைப்பதால் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து உழவர்சந்தை மற்றும் வார ச்சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் வியாபாரிகளும் நேரடியாக வந்து வெங்கா யத்தை வாங்கி செல்கின்ற னர். தற்போது வீரபாண்டியில் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி செல்வி என்பவர் தெரிவிக்கையில்,
65 நாட்கள் பயிரான வெங்காயம் கடந்த வருடம் விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை அதிகரித்தது. தற்போதும் ஒரு சில பகுதிகளில் விலை குறைவாகவும், மற்ற பகுதி களில் விலை கூடுதலாகவும் விற்பனையாகிறது. பெரும்பாலான இடங்களில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.
- நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல.
- அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் தங்கபாண்டி(19). இவர் வீரபாண்டி அரசு கலை க்கல்லூரியில் பி.ஏ. முத லாம்ஆண்டு படித்து வரு கிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வீரபாண்டி போலீ சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாண வனை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் மனைவி பூங்கோதை(23). இவர் தனது மனைவியை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பூங்கோதை மாயமாகி இருந்தார். இதுகுறித்து பாட்டி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பூங்கோதையை தேடி வருகின்றனர்.
- தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
- ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
இதன் அருகே போலீஸ் நிலையம், ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். அலுவலகத்திற்கு வரும் அறநிலையத்துறை அதிகாரி களும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
- சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே சந்திராபுரம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் அடைக்கண்(52). இவர் தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அடைக்கண் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அடைக்கண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
- இன்று காலை முதல் 1333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3410 மி.கன அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படுவதுடன் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
அணைகளின் நீர் மட்டம் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.95 அடியாக உள்ளது. வரத்து 1617 கன அடி. நேற்று 700 கன அடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3410 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 61.02 அடியாக உள்ளது. வரத்து 1379 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3802 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.70 அடி. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 409 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியாக உள்ளது. இதனால் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து 123 கன அடி. திறப்பு 97 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
பெரியாறு 20, தேக்கடி 20, கூடலூர் 20.4, உத்தமபாளையம் 12.6, சண்முகாநதி அணை 4.6, போடி 51.8, சோத்துப்பாறை 31, வீரபாண்டி 18.4, அரண்மனைபுதூர் 16.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






