search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லை பெரியாறு அணையின் உரிமை தமிழகத்திற்கே... ஒப்பந்தத்திற்கு இன்று 137 வயது
    X

    முல்லை பெரியாறு அணை - கர்னல் ஜான் பென்னிகுவிக்

    முல்லை பெரியாறு அணையின் உரிமை தமிழகத்திற்கே... ஒப்பந்தத்திற்கு இன்று 137 வயது

    • ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது.
    • 999 வருடங்களுக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

    முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதார பிரச்சினையாக உள்ளது. இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும், அணை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1886ம் ஆண்டு பெரியாறு அணையின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அணை கட்டப்பட்டது.

    ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் முன்னிலையில் திவான் ராமையங்கார், சென்னை மாகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான் சைல்டு ஹானிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    999 வருடங்களுக்கு இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அதுவரை அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கேரளாவிற்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தம் 1970ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ரூ.30 என்று நிர்ணயிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக 1 கி.வாட்டுக்கு ரூ.12 கேரளாவிற்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    முல்லை பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 137 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×