தேனி அருகே ஆம்புலன்ஸ் ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது. இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com