முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் 4 நாளில் 2 அடி உயர்வு

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் 24-ந்தேதி நீர்மட்டம் 60.47 அடியாக உயர்ந்தது.முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடிஉயரம் கொண்டதாகும். இதன்மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

இதனால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் 48.65 அடியாக நீர்மட்டம் இருந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. வைகை அணைக்கு பெரியாறு, கொட்டக்குடி யாறு, வருசநாடு, மூல வைகையாறு ஆகியவை மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் 24-ந்தேதி நீர்மட்டம் 60.47 அடியாக உயர்ந்தது.

முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் 24-ந்தேதி 60.47 அடியாக இருந்த நீர்மட்டம் இன்றுகாலை 62.89 அடியாக உயர்ந்துள்ளது. 4 நாட்களில் 2 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைக்கு நீர்வரத்து 1370 கனஅடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. 1227 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1333 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின்நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com