என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடமைகள் குறித்து கட்டுரை எழுதிய தேனி பள்ளி மாணவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்
    X

    கடமைகள் குறித்து கட்டுரை எழுதிய தேனி பள்ளி மாணவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

    • வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்.
    • உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பொன்னம்பலம்-வனிதா தம்பதியின் மகன் அபினவ்யஸ்வந்த்(15). இவர் தேவதானப்பட்டியில் கல்வி சர்வதேச பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரதமரால் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக "பரிக்ஷாபே சச்சா 2023" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அதில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டியில் கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரையை பாராட்டி பிரதமர் நரேந்திரமோடி மாணவனுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,

    உங்களை போன்ற இன்றைய தலைமுறை மாணவர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறமைகளை பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் அடைகிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×