ஆண்டிபட்டி அருகே முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

நோய்கொடுமையால் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வருசநாடு:

ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா(63). மது குடிக்கும் பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆனால் உடல்நலம் சீராகாததால் விரக்தியடைந்த ராஜா அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கண்டமனூர் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் சேர்மலை(45). விவசாயி. கடந்த சில மாதங்களாக நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com