என் மலர்tooltip icon

    தேனி

    • பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
    • சோதனையில் கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது அங்கு கஞ்சா விற்ற நாகராஜபிரபு (23), முருகேசன் (29), சிவதேசிங்கு (25), கவிதா (39) ஆகிய 4 பேரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிபட்டி அருகே கொண்டம நாயக்க ன்பட்டி யை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் தொப்பம்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். ரோந்து சென்ற ராஜதானி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அமர்மேக்தே (24). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னவேலு மகன் காவியா (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ த்தன்று பள்ளிக்கு செல்ல வில்லை. யாருடனும் பேசா மல் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் மணி மனைவி அய்யம்மாள் (வயது45). கடன் தொல்லை யால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கிய அய்ய ம்மாளை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேனி அல்லிநகரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (35). பெற்றோரை இழந்ததால் சற்று மனநிைல பாதிக்கப்பட்டார். அவரது உறவினர் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து பரா மரித்து வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்னர்.

    • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்த லைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பால முருகன், கடவுள், நாராயண பாண்டியன், விஜயன், ராஜ்குமார், தினேஷ்குமார், மணிகண்டன், சந்திரமோகன், கிருஷ்ண குமாரி, ஆனந்தி, சரஸ்வதி, சங்கீதா மற்றும் சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் நாகராஜ், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படு த்தாத வகையில் காலதாமதம் இன்றி வரிகளை விதிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அதுபோல கவுன்சிலர்கள் நாராயண பாண்டியன், ராஜ்குமார் மற்றும் பெரு ம்பாலான கவுன்சிலர்கள் பேசுகையில், தேனி நகரில் உள்ள வாரச்சந்தை குத்தகை ஏலம் குறைந்த தொகைக்கு ஏலம் போயிருப்பதால் அந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கீதா, சரஸ்வதி, கிருஷ்ணபிரபா, பாப்பா, கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர் ஆனந்தி ஆகியோர் வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதனை அடுத்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடிப்படை பணிகளை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட புதூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துச் சென்ற பெண்களை மது போதையில் கேலி செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், ராமன் ஆகிய 3 பேரும் ரகளையில் ஈடுபட்ட அறிவழகனை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டுள்ளனர். இதனால் அறிவழகனுக்கும் சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன் மற்றும் ராமன் ஆகிய 3 ேபரையும் அறிவழகன் கத்தியால் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் போடி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நிறைவுற்று அறிவழகன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து அறிவழகன் மதுரை மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 3 முறை சங்குகள் ஒலிக்கப்பட்டு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2693 கன அடி நீர் வருகிறது. தற்போது அணையில் இருந்து 69 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5562 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

    இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கரையோரம் இருந்த மக்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்பதால் கால்நடைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 126.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1855 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4169 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. வரத்து 122 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 368.39 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியிலேயே நிற்கிறது. இதனால் அணைக்கு வரும் 299 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6-ம் நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பிள்ளையார் அருவி, மேகமலை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்வதால் மலைச்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பெரியாறு 1, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 6.2, சண்முகாநதி அணை 14, போடி 2.3, வைகை அணை 30.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 10, பெரியகுளம் 12, வீரபாண்டி 3.8, அரண்மனைப்புதூர் 26.8, ஆண்டிபட்டி 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடல் நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    கம்பம்:

    கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் காமுகுல ஒக்கலிகர்(காப்பு) சமுதாய த்தின் சார்பில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 15 நாட்க ளுக்கு முன்பு சாற்றுதலுடன் விழா தொடங்கியது.

    இன்று மஞ்சள்நீராட்டு விழா நடைபெற்றது. விழாக்குழுவினர் மாலை மரியாதையுடன் ஊர்வல மாக அழைத்து வரப்பட்ட னர். நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது.

    கம்பம் பார்க் திடலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மஞ்சள் நீரை ஊற்றினார்.இன்று மாலை பகவதியம்மன் அழைப்பு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாளை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் வண்டி வேசம் ஆகியவை நடைபெறுகிறது.

    • குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார். தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பசுமை நகரை சேர்ந்தவர் சர்க்கரை மகள் வினோதேவி(33). இவருக்கும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த முரளிகுமார் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே வினோதேவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்து தனது தாய் முருகலெட்சுமி யுடன் தனியாக கொடு விலார்பட்டியில் வசித்து வந்தார்.

    இதனிடையே அவரது கணவர் முரளிகுமார் அவ்வப்போது தேனிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். இதனால் அவரது தாயார் முருகலட்சுமியும் இனிமேல் தனது மகள் கணவருடன் சேர்ந்த ஒற்றுமையாக வாழ்வார் என நினைத்து ள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சம்பவத்தன்று வினோதேவியின் அண்ணன் மதன்ராஜா தீபாவளிக்கு ஜவுளி எடுக்க தனது தங்கை குடும்பத்தை அழத்துச்செல்வதற்காக வந்துள்ளார். அப்போது ஒரு அறையில் வினோதேவி தூக்குமாட்டிய நிலையில் இறந்துகிடந்தார்.

    அவரது தாய் முருக லட்சுமி அதிகளவு மாத்திரை களை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக தனது தாயை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது.

    போலீசார் சம்பவ இட த்திற்கு வந்து வினோதேவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் அளித்தனர்.

    இதுகுறித்து வி.ஏ.ஓ தேவி ஆண்டிபட்டி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்துகிடந்த ஆண்சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் என்பதும், அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு வக்கீல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தேனி:

    தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நாமக்கல் வக்கீல் மணிகண்டன் என்பவரை கொலை செய்த சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், அதுபோல சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும்,

    வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வக்கீல்கள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வன் முன்னிலையில் கோர்ட்டு பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், இளங்குமரன், ,மல்லீஸ்வரன், ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன், பாண்டிமணி, ஹரிஹரசுதன், ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • சின்னமனூரில் பகுதியில் ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
    • மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் 23-வது வார்டு ஊர்க்காவல் தெருவில் வசித்து வரும் முத்தீஸ்வரன் (வயது 40). இவரது மனைவி ஈஸ்வரி (35) இவர்களது வீடு கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுவர் இடிந்து விழுந்தது.

    அப்போது முத்தீஸ்வரன் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 23 வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள்ராமு, துணைத் தலைவர் முத்து க்குமார் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.

    பின்பு மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • சிங்கராஜபுரம் ஊராட்சியில் சாலை தொடர் மழையால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.
    • இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசனூத்து, முத்தூத்து, தேக்கிளை குடிசை திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளையும் பயிர்களை ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்தநிலையில் இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியுற்று வந்தனர்.

    இந்த கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்க ளில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த தார் சாலை கனமழையின் காரணமாக அதிக அளவில் சேதமடைந்து போக்கு வரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    சில இடங்க ளில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதி காரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

    தேனி:

    தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதனால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    பட்டாசுகளை வெடிப்ப தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடு வதற்கு பொது மக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×