வருசநாடு அருகே தொடர் மழையால் சேதமடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

சிங்கராஜபுரம் ஊராட்சியில் சாலை தொடர் மழையால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.
சிங்கராஜபுரம் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் அமைந்துள்ள தார் சாலையை படத்தில் காணலாம்.
சிங்கராஜபுரம் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் அமைந்துள்ள தார் சாலையை படத்தில் காணலாம்.
Published on

வருசநாடு:

தேனி மாவட்டம் வருச நாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசனூத்து, முத்தூத்து, தேக்கிளை குடிசை திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் பயிர்களை ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்தநிலையில் இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியுற்று வந்தனர்.

இந்த கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்க ளில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த தார் சாலை கனமழையின் காரணமாக அதிக அளவில் சேதமடைந்து போக்கு வரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

சில இடங்க ளில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதி காரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com