கம்பம் : பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள்நீராடல்

கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடல் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் இன்று மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற்றது.
கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் இன்று மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற்றது.
Published on

கம்பம்:

கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் காமுகுல ஒக்கலிகர்(காப்பு) சமுதாய த்தின் சார்பில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 15 நாட்க ளுக்கு முன்பு சாற்றுதலுடன் விழா தொடங்கியது.

இன்று மஞ்சள்நீராட்டு விழா நடைபெற்றது. விழாக்குழுவினர் மாலை மரியாதையுடன் ஊர்வல மாக அழைத்து வரப்பட்ட னர். நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது.

கம்பம் பார்க் திடலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மஞ்சள் நீரை ஊற்றினார்.இன்று மாலை பகவதியம்மன் அழைப்பு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாளை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் வண்டி வேசம் ஆகியவை நடைபெறுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com