ஆண்டிபட்டியில் அடையாளம் தெரியாத ஆண்பிணம்

தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் அளித்தனர்.

இதுகுறித்து வி.ஏ.ஓ தேவி ஆண்டிபட்டி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்துகிடந்த ஆண்சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் என்பதும், அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com