என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
- விவசாயி ராமையாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விவசாயிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி ரொக்கப்பரிசுக்கான காசோ லைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதில், விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி குமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றதற்காக முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிவகங்கை வட்டம், கூத்தாண்டன் கிராமத்தில் விவசாயி அமுதாராணி 2 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு வளர்த்து அதிக மகசூல் பெற்றதற்காக 2-ம் பரிசு ரூ.20ஆயிரமும், காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி ராமையாவுக்கு 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றார்.
அப்போது பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.
- தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது
- அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அம்மன் தரிசனம் செய்ய கோவிலில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.
விழாவின் முக்கிய உற்சவங்களான பொங்கல் வைபவம் ஏப்ரல் 5-ந் தேதியும், மின்விளக்கு தேர் பவனி 6-ந் தேதியும் 7-ந் தேதி பால்குடம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு புஷ்பபல்லக்கு வீதி உலாவும் நடக்கிறது. 8-ந் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறு கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பந்தல் மற்றும் வரிசையில் செல்ல காலரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வறண்டிருந்த தீர்த்த குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் நிரப்பி குளம் நிறைந்து காணப்படுகிறது.
திருவிழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாயமங்க லத்துக்கு வரும் பக்தர்கள் முத்து மாரியப்பனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி சுமந்தும் நேர்த்தி கடன் நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்வார்கள்.
திருவிழா தொடங்கு வதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பஸ், கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து வேண்டுதல் நிறை வேற்றி முத்துமாரியம்மன் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் திருவிழா ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.
- சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
- இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷபூஜை நடந்தது.
வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி பிரகாரம் வலம்வந்து தீபாராதனை நடந்தது.
சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுளீசுவரருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமக்குடி ரோட்டில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர் காசிநந்திக்கு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், இடைக்காட்டூர் ஆழி மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில்களிலும் பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- பிடாரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இந்த விழாவில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வடக்கு வாசல் செல்வி என்ற பிடாரி அம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடந்தது.
பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுகளை ஏந்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு நடைபயணமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக பிடாரி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
மாலை 6 மணி முதல் பால் குடங்களும், பூத் தட்டுகளும் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சுமார் 15 கிலோ மட்டர் தொலைவில் உள்ள கொன்னையூருக்கு பக்தர்கள் தலையில் பூத்தட்டுகளை சுமந்தவாறு நடை பயணமாக புறப்பட்டு சென்றனர்.
கோவில் மந்தை திடலில் கரகாட்டம், ஒயிலாட்டம்,நாதசுவர வாத்தியம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளானோர் பங்கேற்ற இந்த விழாவில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- காளையார்கோவில் அருகே, 27-ந் தேதி கொங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஆசிரமம் கிராமத்தில் கொங்கேசுவரர் கோவில் உள்ளது.
பிரசித்திபெற்ற 300 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 2 ஆயிரம் பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்பது வழக்கம்.
கொங்கேசுவரர், 7 முக காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இலவச வாகன வசதியும் செய்யபட்டு வருகிறது. 30ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், கொங்கேசுவரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
- வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.
மானாமதுரை செர்டு சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த விழாவையொட்டி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்புவனம் புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
காவல்துறை சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி பேரணியை தொடங்கி வைத்தார். நரிக்குடி சாலையில் பேரணி நிறைவடைந்தது. அதன் பின்னர் நடந்த விழாவில் செர்டு சமூக சேவை நிறுவன இயக்குநர் எல்.பாண்டி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி உள்ளிட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பேசினர். வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கல்லல் யூனியனில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
- 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.31.98 லட்சம் மதிப்பீட்டில் 3 வளர்ச்சித் திட்ட பணிகள் முடிவுற்றன. இதன் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று திட்டப்பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை மேற்கொள்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.3கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப டுகிறது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிதாக சமுதாய கூடத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கும் மற்றும் அதிகரம் பள்ளியை நிலை உயர்த்துவதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 90 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க புதிதாக ரூ.9.89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ மின்மாற்றியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பலவான்குடி ஊராட்சி, ஆலத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து எடுத்துரைத்து அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் உடன டியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம் அசோகன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் லதா தேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் நாராயணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லட்சு மணன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முத்தழகு, சையது அபுதாகிர், ஊராட்சி மன்றத்தலைவர் சரோ ஜாதேவி குமார் (சிராவயல்), அமுதா (கம்பனூர்), சத்திய கலா(பலவான்குடி), வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் செழியன், அழகு மீனாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
- மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதி திராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.
துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி.குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரம், 7.5 எச்.பி.குதிரை திறன் மின் இணைப்புகட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 எச்.பி. குதிரை திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரம், 15 எச்.பி.குதிரை திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், அ-பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சிவகங்கை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனையில் ரூ.1.27 கோடியில் ஆக்சிஜன் பிளாண்ட்டை கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார்.
- தலைமை மருத்துவர் செங்கதிர் நன்றி கூறினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ மனைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஏற்பாட்டில் டாடா குழுமத்தின் டி.சி.எஸ். பவுண்டேசன் மூலம் சுமார் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 500 லிட்டர் கொள்ளவில் ஒரே நேரத்தில் 100 ேபருக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார்.
பின்னர் எம்.பி. பேசுகையில், டாடா குழுமத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.4 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிளாண்ட். மேலும் அதிக செலவிலான ஆக்சிஜன் பிளாண்டை சரியான முறையில் பராமரிப்பு செய்து பயன்படுத்த வேண்டும். மருத்துவ மனையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
சுகாதார துறை இணை இயக்குநர் தர்மர் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர், தி.மு.க. நகரச் செயலாளர் பால முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சபாபதி, தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய், காங்கிரஸ் மாநில இலக்கிய அணிச் செயலாளர் சுவாமிநாதன், வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தலைமை மருத்துவர் செங்கதிர் நன்றி கூறினார்.
- இரட்டை கொலையில் சம்பந்தப்பட்டகுற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
- அவர்கள் பிடிபட்டால் பல உண்மைகள் தெரியவரும்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய்- மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. துரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் இரட்டை கொலையில் தொடர்புடையவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் 2 மாதங்களுக்கும் மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை மற்றும கொள்ளை சம்பவத்தில் ெதாடர்புடையவர்கள் என்று வெள்ளைச்சாமி, ரமேஷ் குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கொள்ளை யர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் இரட்டை கொலை நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும் கைதான கொள்ளையர்கள் இந்த கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்த கண்ணங்கோட்டை கிராம மக்கள் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை திசைதிருப்பக் கூடாது என்று கூறினர்.
இதுதொடர்பாக டி.ஐ.ஜி. துரையிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கு ெதாடர்பு இல்லை. இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பல உண்மைகள் தெரியவரும் என்றார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய்- மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை யடித்து சென்றனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. துரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் இரட்டை கொலையில் தொடர்புடையவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் 2 மாதங்களுக்கும் மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை மற்றும கொள்ளை சம்பவத்தில் ெதாடர்புடையவர்கள் என்று வெள்ளைச்சாமி, ரமேஷ் குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கொள்ளை யர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் இரட்டை கொலை நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும் கைதான கொள்ளையர்கள் இந்த கொலை வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்த கண்ணங்கோட்டை கிராம மக்கள் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை திசைதிருப்பக் கூடாது என்று கூறினர்.
இதுதொடர்பாக டி.ஐ.ஜி. துரையிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கு ெதாடர்பு இல்லை. இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பல உண்மைகள் தெரியவரும் என்றார்.
- வணிகவியல் தின விழா நடந்தது.
- உதவிப்பேராசிரியர் நசீர்கான் நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் தின விழா நடந்தது. துறைத்தலைவர் நைனா முஹம்மது வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர்- முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி பங்கேற்று பேசினார். பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் நன்றி கூறினார்.






