என் மலர்
சிவகங்கை
- அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சியில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலைத் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார், சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளன.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
- 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த ஆய்வுகளின் போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவு, வட்டாட்சியர் அலுவல கங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களி டம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப் பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்க ளின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறை வாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப் பட்டு வரும் கோப்புகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவவும், தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜி முன்னிசா, வட்டாட்சியர்கள் சாந்தி (சிங்கம்புணரி), வெங்கடேசன் (திருப் பத்தூர்), தனி வட்டாட்சி யர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஆனந்தன் (சிங்கம் புணரி), கண்ணதாசன் (திருப்பத்தூர்) உள்பட பலர் உடனிருந்தனர்.
- மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீசுவரர் கோவிலில் மகா கும்பாபிஷே விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோவில் அருகே பிரமாண்ட யாகசாலை அமைத்து மூலவர் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூலவர் விமான கலசங்கள் மற்றும் பரிவார விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நிறைவாக கலசத்திற்கு பட்டு வஸ்திரம், பூ மாலை சாற்றி ஏக முக கற்பூர ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம், மானாமதுரை பிரித்தியங்கிரா கோவில் சுவாமி ஞானசேகரன், ஸ்தபதி சண்முகம், சிவகங்கை தேவஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார், துணைத்தலைவர் சிவகாமி ராஜிபிள்ளை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, ரமேஷ் சுவாமி, முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லப்பா குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி. நமச்சிவாயம், டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் பூபதி ராஜா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், காரைக்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் (55) என்பவரும் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.
மேலும், மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
- கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரியில் தமிழ் புத்தாண்டு புதுமழையை தொடர்ந்து பொன் ஏர் பூட்டும் திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்றனர்.
- புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதிக்கு பிறகு பெய்யும் முதல் மழை அந்த ஆண்டின் புதுமழை மற்றும் உத்தமழை என்று அழைக்கப்படுகிறது.
இப்பகுதி விவசாயிகள் புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.
அதன்படி தமிழ் புத்தாண்டுக்கு பிறகு கடந்த 23, 24-ந் தேதிகளில் சிங்கம்புணரி பகுதியில் புது மழை பரவலாக பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுமழை பெய்ததை தொடர்ந்து சிங்கம்புணரி கிராமத்தார்கள் பொன்-ஏர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதற்காக சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்ய னார் கோவிலுக்கு சொந்த மான விளை நிலத்தில் கோவில் மாடுகளை கொண்டு வழிபாடு செய்து விவசாய பணிகளை தொடங்கினர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான செயல் அலுவலர் தன்னாயிரம் முன்னிலையில் கிராமத்தார்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் கோவில் நிலத்தில் ஏர் பிடித்து பொன் ஏர் விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குல தெய்வ வழிபாடு நடந்தது.
சித்திரையில் புது மழைக்கு பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது சமூக ஒற்றுமைக்கும் , நல்ல மழை பொழிந்து நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.
- சிங்கம்புணரி அருகே செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வேங்கைபட்டி ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதியுடன் முதல் கால பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து நேற்று 2-ம்கால பூஜைகள் நடந்தது. இன்று காலை பல்வேறு சிறப்பு பூைஜகள்,ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை நடந்தது.
- இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேசன் கடை இயங்கி வந்தது. இந்த ரேசன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய ரேசன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கினார். இதையடுத்து ரேசன் கடை புதிய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்தவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் துணைத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தபகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, பிள்ளையார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைமை அறிவுரையாளர் பெருமாள் கலந்து கொண்டார். பிள்ளையார்பட்டியில் கோடைகாலம் முழுவதும் செயல்படும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பலசரக்கு, காய்கறிகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனமும், வறுமையில் உள்ள பெண்களுக்கு மகளிர் மேம்பாட்டு விழிப்புணர்ச்சி முகாம் அமைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு மாணவிக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதில் மீனாள் ஆதீனமிளகி, பால சரசுவதி முத்துகிருஷ்ணன், நிருபா அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிம்மவாகனத்தில் வந்த ஆனந்தவல்லி அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் விழாவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட அரங்கில் ஆனந்தவல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின் ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வைகைஆற்றில் திரண்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, முன் னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், தொழில் அதிபர் நடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர் உள் ளிட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.
- திருப்பத்தூரில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட செயலாளர் பேசினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடந்தது. முன்னதாக பஸ் நிலையம் அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறப்புவிழா நடந்தது.
அதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளரும், சிங்கம்புணரி ஒன்றிய குழுத்தலைவருமான திவ்யாபிரபு ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பா ட்டை இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு செய்திருந்தார். இதில் மாநில பாசறை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரமசிவம் பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். அதை மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட பேரவை இணைச்செயலாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






