என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ் புத்தாண்டு புதுமழையை தொடர்ந்து பொன் ஏர் பூட்டும் திருவிழா
- சிங்கம்புணரியில் தமிழ் புத்தாண்டு புதுமழையை தொடர்ந்து பொன் ஏர் பூட்டும் திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்றனர்.
- புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதிக்கு பிறகு பெய்யும் முதல் மழை அந்த ஆண்டின் புதுமழை மற்றும் உத்தமழை என்று அழைக்கப்படுகிறது.
இப்பகுதி விவசாயிகள் புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.
அதன்படி தமிழ் புத்தாண்டுக்கு பிறகு கடந்த 23, 24-ந் தேதிகளில் சிங்கம்புணரி பகுதியில் புது மழை பரவலாக பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுமழை பெய்ததை தொடர்ந்து சிங்கம்புணரி கிராமத்தார்கள் பொன்-ஏர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதற்காக சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்ய னார் கோவிலுக்கு சொந்த மான விளை நிலத்தில் கோவில் மாடுகளை கொண்டு வழிபாடு செய்து விவசாய பணிகளை தொடங்கினர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான செயல் அலுவலர் தன்னாயிரம் முன்னிலையில் கிராமத்தார்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் கோவில் நிலத்தில் ஏர் பிடித்து பொன் ஏர் விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குல தெய்வ வழிபாடு நடந்தது.
சித்திரையில் புது மழைக்கு பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது சமூக ஒற்றுமைக்கும் , நல்ல மழை பொழிந்து நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.






