என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கண்ணங்குடி ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
    • இது சம்பந்தமாக கோட்டாட்சியரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை கோட்டாட்சியரிடம் கண்ணங்குடி ஒன்றிய சேர்மன் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    அவற்றில் கூறியிருப்ப தாவது:-

    கண்ணங்குடி ஒன்றியத்தில் பெரும் பகுதி மழை இன்றி விவசாயம் பொய்த்துவிட்டது. அதிலும் குறிப்பாக சித்தானூர், அனுமந்தகுடி, தத்தணி, திருப்பாக்கோட்டை, மனைவி கோட்டை போன்ற ஊராட்சிகளில் முழுமை யான மழை இன்றி பயிர்கள் கருகி விட்டது.

    இதை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரி கள் நேரடியாக பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்கள். இருப்பினும் இதுவரை வறட்சி நிவாரணம் வழங்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனு அளித்துவிட்டு கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் கூறுகையில், 2022-23 ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரண நிதி கண்ணங்குடி ஒன்றியத்திற்கு வழங்கப்படவில்லை, மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களோடு சேர்த்து கண்ணங்குடி ஒன்றியத்திற்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் தற்பொழுது கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு பிறகும் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை என்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும்.
    • தேவகோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், நகர் மன்ற துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேசுகை யில், நகராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்க அரசுக்கு நகர் மன்றம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அதிகாரிகள் அனைவரும் தீவிர நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அனிதா சஞ்சய் கவுன்சிலர் :- நகரில் ஒரு பகுதி கழிவுநீர் அனைத்தும் இரவுசேரி ஊரணியில் கலப்பதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருகிறது. உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : ஊரணியில் பல ஆண்டு காலமாக நகரில் உள்ள கழிவுநீர் செல்கிறது அதனை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள கழிவு நீர்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றிணைத்து அவற்றை மறுசுழற்சி செய்ய அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    துணைத் தலைவர் ரமேஷ் :- நகரில் உள்ள காலி இடங்களில் கருமேல மரம், மழைநீர் தேக்கம் மற்றும் குப்பைகள் இருந் தால் உரிமையாளர்களுக்கு முதலில் நகராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட வேண்டும். இதனால் தொற்று நோய் பரவல் தடுக்க முடியும். 3,8,9 வார்டுகளில் குடிநீர் சரிவர வரவில்லை உடனே அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தலைவர் : காலி யிடங்களில் உள்ள உரிமை யாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வார்டுகளில் குடிநீர் சேவையை சரி செய்ய கூடுதல் போர்வல் போட நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார்.

    இதேபோல் கவுன் சிலர்கள் ஷேக் அப்துல்லா, கோமதி பெரியகருப்பு, சுதா, நீேராஜா சுந்தரலிங்கம், வடிவேல் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அதற்கு நகர் மன்ற தலைவர் பதலளித்தார்.

    • புனித மைக்கேல் கல்லூரி வெள்ளி விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
    • ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்றார்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது .இந்த கல்லூரியை என்ஜினீயர் மைக்கேல் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

    இந்த கல்லூரியின் வெள்ளி விழா செயலாளர் பாத்திமா மேரி தலை மையில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்புரையாற்றி னார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பளார் அரவிந்த், லீமா ரோஸ்மார்டின், கல்லூரி சி.இ.ஒ. எஸ்.பிரிட்ஜெட் நிர்மலா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆசி ரியர் தொழில் பயிற்சி கல்லூரியாக தொடங்கப் பட்டது இந்த கல்லூரி. நாளடைவில் பொறியியல் கல்லூரி ஆக வளர்ந்துள் ளது. இதன் மூலம் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இவர்கள் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாண விகளை பட்டதாரிகளாக்கி உள்ளார்கள்.

    பிற்பட்ட பகுதியில் இத்தகைய கல்லூரிகள் தொடங்குவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இங்கு படிக்க முடியும். கல்லூரிகளும் தரமான நவீன கல்வியை அளிக்க வேண்டும்.இதனால் அவர்களது வாழ்க்கையில் இதன் மூலம் ஒளி ஏற்ற முடியும்.

    இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து கல்விக்கான நல்ல பணிகளை செய்திட வேண்டும் என்று வாழ்த்து கிறேன். மிகவும் சிரமமான சூழ்நிலையில் பொறியாளர் மைக்கேல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்பொழுது வளர்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் 25 ஆண்டுகளாக கல்லூரியில் பணியாற்றிய முதல்வர், பேராசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி னார்கள்.

    கல்லூரி முதல்வர் கற்பகம் நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடை பெற்றது. வெள்ளி விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் சேர்மன் டாக்டர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப் பாளர் விஸ்வநாதன் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜோன்ஸ்ருசோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் முதல் முறையாக சிவகங்கையில் புனித அன்னை தெரசா ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
    • திறப்பு விழாவில் சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே வல்லனி என்ற இடத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் தமிழ கத்தில் முதல் முறையாக மிகப்பிரமாண்டமாய் அன்னை தெரசா ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம், 100-க்கும் மேற்பட்ட அருட் தந்தைகள் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலயத்தை எழில்மிகு வண்ணத்துடன் அன்னை தெரசா ஆலயத்தின் பங்குத்தந்தை லூர்து ராஜ் மேற்பார்வையில் கட்டப்பட்டு உள்ளது. அன்னை தெரசா விற்காக தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதால் இது மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டிருந்தது.

    திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த தேவாலயம் வண்ண மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திறப்பு விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவில் சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    • திருப்பத்தூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தர வலியுறுத்தினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டம்பூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிந்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூறி இப்பகுதி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளி டமும், மக்கள் பிரதி நிதிகளிடமும் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிைற வேற்றி தர வலியுறுத்தி யும் காட்டம்பூர் கிராம பெண்கள் மதுரை - திருப் பத்தூர் தேசிய இணைப்பு நெடுஞ் சாலை யில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து பேச்சு வார்த்ைத நடத்தினர். ஆனால் பலன் இல்லை.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மண்டல வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து காட்டம்பூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. பல மாதங்களாக தெரு விளக்கு வசதியும், சாலை வசதியும் இல்லாமல் உள்ளது. எங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆடு- மாடு மேய்ச்சல் திடலில் தற்சமயம் போர் வெல் (ஆழ்குழாய் கிணறு) அமைக்கப் பட்டுள்ளது. அதனால் எங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் எந்த ஒரு பயன்பாடு இல்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

    பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகியிடம் எடுத்துரைத்தும் அதற்கான எந்த ஒரு மேல் நடவடிக் கையும் எடுக்கப் படாத காரணத்தினால் எங்கள் அடிப்படை தேவைகளை அரசின் உயர்மட்ட அதிகாரி கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

    • மானாமதுரையில் சார்பதிவாளர் நியமிக்கப்படாததால் பத்திரப்பதிவுகள் செய்ய தாமதமாகிறது.
    • பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நாள்தோறும் சுமார் 40 ஆவணங்கள் வரை பதிவுகள் நடைபெற்றன.

    இங்கு சார் பதிவாளராக பணி செய்த ஆதிலெட்சுமி கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். இதன்பிறகு இதுவரை மானாமதுரை சார்பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரப்பதிவாளர் நியமிக்கப்படாமல் பணியிடம் காலியாக உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள், பொறுப்பு அதிகாரியாக மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சொத்து ஆவ ணங்கள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மானா மதுரைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் கூறுகையில், மானா மதுரையில் சார் பதிவாளர் பணியிடம் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளது. இதனால் பதிவுக்கு தாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

    இங்கு நாள்தோறும் 40 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 ஆவணங்கள் கூடப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட பதிவுத் துறை நிர்வாகம் மானாம்துரைக்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

    • அழகப்பா கல்வி குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைரவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
    • சமுதாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    காரைக்குடி

    அமெரிக்காவில் தலை மைத்துவ மற்றும் தொழில் நுட்ப மாநாட்டின் போது விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பல்வேறு முன்னணி தொழில் முனை வோர், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

    தொழில்முனைவோரும், கல்வியாளரும், காரைக்குடி அழகப்பா கல்வி குழும தலைவருமான டாக்டர்.ராமநாதன் வைரவனுக்கு கல்வி, கலை மற்றும் புரவலர் ஆகியவற்றில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் பட்டது.

    டாக்டர் வைரவன், வள்ளல் டாக்டர் ஆர்.எம் அழகப்ப செட்டியாரின் பேரன் ஆவார். சுகாதாரத் துறையில் நாற்பது ஆண்டு களுக்கும் மேலாக புகழ்பெற்ற தொழில்களை திறம்பட நடத்திக்கொண்டு வருகிறார். பன்னாட்டு நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகித்தவர்.

    காரைக்குடியில் உள்ள டாக்டர் அழகப்ப செட்டி யார் கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னையில் உள்ள அசோகா அறக் கட்ட ளை ஆகியவற்றின் தலைவர் செயலாளராக, டாக்டர் வைரவனின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை, கல்வி மற்றும் புரவலராக சாதனை களை புரிந்துள்ளதை, பல்வேறு கல்வி நிலைகளில் பயின்ற 8000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மேம்பாடுகளில் அறிந்து கொள்ளலாம்.

    விருது வழங்கும் விழா வில் டாக்டர் ராம நாதன் வைரவன் பேசுகை யில், 47 ஆண்டுகளில், காரைக் குடியின் மாற்றத்தில் என் தாத்தா டாக்டர் அழகப்ப செட்டியார் ஒரு அழியாத தடம் பதித்தார்.அவர் தனது 1000 ஏக்கர் காடுகளை பல கல்வி நிறுவனங்களை உரு வாக்க நன்கொடையாக வழங்கினார். இது 3 மில்லி யனுக்கும் அதிகமான மாண வர்கள் உருவாக்க வழி வகுத்தது. மேலும் பெண்கள் கல்லூரியை நிறுவ தனது பங்களாவைக் நன்கொடை யாக அளித்து ஒரு சாதாரண கூட அறையில் வசித்து வந்தார். தொழில் முனை வோர்கள், சமுதாயத்திற்குத் திரும்ப கொடுக்கும் அர்ப் பணிப்பு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆயுர்வேத கல்லூரியை உருவாக்கி, கல்வித் துறையை மேலும் மேம்படுத்தி. சமு தாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தலைவர்உறுதி கூறினார்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேசுவரன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பேசுகையில், பொது நிதியிலிருந்து ரூ.4.87 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் 37 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனஅதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    • 5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து வடநாட்டு சாமியார் ஆசி வழங்கினார்.
    • பெயர் சொல்ல மறுத்து அவர் ஆங்கிலத்தில் பேசினார்.

    மானாமதுரை

    இமாச்சல பிரதேசம் கேதார்நாத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு செல்ல சாமியார் ஒருவர் மானாமதுரைஅருகே உள்ள கீழடி 4 வழிச்சாலையில் நடைபயணமாக வந்தார்.

    அவர் கழுத்தில் 5 கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசியும், இடையில் சிறிய துண்டும் அணிந்து கையில் திரிசூலம், உடுக்கை உள்ளிட்டவற்றுடன் காணப்பட்டார்.

    ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கேதார்நாத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட இவர் தினமும் காலை 4 மணியில் இருந்து 12 மணி வரை நடப்பது அதன்பின் ஓய்வு எடுப்பதுமாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    பெயர் சொல்ல மறுத்து அவர் ஆங்கிலத்தில் பேசினார். மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தி விட்டு திருச்சி செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • காளையார் கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • புனித மைக்கேல் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை காளையார் கோவில் புனித மைக்கேல் கல்லூரியின் நிறுவனர் மைக்கேல் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடை பெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டியில் 8 ஜோடிகள், சின்ன மாட்டு வண்டியில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு வண்டியினை புனித மைக்கேல் கல்வில்குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை தபிழ்நாடு பார்க்கவகுல சங்க மதுரை மாவட்ட தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.20,000 மூன்றாம் பரிசு 15 ஆயிரம் நான்காம் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. நிகழ்சி பரிசுகளை ஆனந்தராஜ், கண்ணன், லூயிஸ் ராஜா, சபரிராஜன், துரைமுத்து, ராமன், மகேஸ்வரன் ஆகியோர் வழங்கி கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஜான் சந்தியாகு, மோசஸ் ஏற்பாடு கள் செய்தனர்.

    • திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருள்கள் மற்றும் தனது சார்பில் சேலை, பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழா வின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளை காப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத் திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் தொடங்கி 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது டன் தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவ கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பால்துரை, சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூ ராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முக மது, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோமதி சண்முகம், ராஜேஸ்வரி சேகர், சரண்யாஹரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார் பில், அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்க ளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற் றும் இலவச கண் சிகிச்சை முகாம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப் பினர் பிஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்து, பார்வை யிட்டனர். அப்போது வட்டா ரப் போக்குவரத்து அலுவ லர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் கரைக் குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாக னங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவைக ளின் ஓட்டுனர்க ளுக்கு, சாலை பாதுகாப்பு தொடர் பான பல்வேறு விழிப்பு ணர்வு கருத்துக்கள் எடுத்து ரைக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கின்ற வகையில், ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ பரிசோதனைகள் இம் முகாமில் மேற்கொள்ளப் பட்டது.

    இதில், மாவட்டம் முழு வதும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர். இம்முகாமினை, சிவ கங்கை வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தியது.

    ×