என் மலர்

  நீங்கள் தேடியது "Free eye treatment camp"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முகாமில் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.
  • முகாமில் 88 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

  சங்கரன்கோவில்:

  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு சங்கர சுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார்.

  கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஆகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.

  இதில் 88 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 38 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

  தேனி:

  தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தேனி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

  மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி, பாண்டியராஜன் உள்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
  • 17-ந் தேதி திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சி நடக்கிறது.

  நெல்லை:

  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.பாளை மகாராஜநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

  இதையொட்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி காமராஜர் பிறந்த நாளை கொண்டாட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.

  அதன்படி முதல்நாளான இன்று நாங்குநேரியில் உள்ள ஆர்.யூ.சி. மஹாலில் இலவச கண்சிகிச்சை முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

  தொடர்ந்து மாலை 4 மணிக்கு மன்னார்புரம் விலக்கில், விவேக் முருகன் ஏற்பாட்டில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

  பாளை மகாராஜநகரில் உள்ள தனது இல்லத்தில் 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்குகிறார்.

  காமராஜர் பிறந்த நாளான நாளை காலை 7 மணிக்கு ரெட்டியார்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

  தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சுருளை கிராமத்திலும், 7.45 மணிக்கு முனைஞ்சிப்பட்டியிலும், 8மணிக்கு விஜயஅச்சம்பாட்டி லும், 9.15 மணிக்கு இட்ட மொழியிலும், 10 மணிக்கு பரப்பாடியிலும், 11.30 மணிக்கு களக்காட்டிலும், மதியம் 12.45 மணிக்கு சிதம்பராபுரத்திலும், மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திலும் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

  மாலை 4 மணிக்கு ஓமநல்லூர் மாலை 5 மணிக்கு மருதகுளம், 6 மணிக்கு கண்ணநல்லூர், இரவு 7.15 மணிக்கு இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

  16-ந் தேதி காலை 10 மணிக்கு குன்னத்தூர் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

  மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பு கபடி போட்டியை தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

  17-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் நடைபெறும் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, உணவு அருந்துகிறார். மாலை 6.30 மணிக்கு கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.

  ×