பல்லடம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கண் பரிசோதனை நிபுணர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்த காட்சி.
கண் பரிசோதனை நிபுணர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்த காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com