என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காமராஜர் பிறந்த நாளையொட்டி நாங்குநேரியில் இலவச கண்சிகிச்சை முகாம்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  X

  ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

  காமராஜர் பிறந்த நாளையொட்டி நாங்குநேரியில் இலவச கண்சிகிச்சை முகாம்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
  • 17-ந் தேதி திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சி நடக்கிறது.

  நெல்லை:

  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.பாளை மகாராஜநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

  இதையொட்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி காமராஜர் பிறந்த நாளை கொண்டாட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.

  அதன்படி முதல்நாளான இன்று நாங்குநேரியில் உள்ள ஆர்.யூ.சி. மஹாலில் இலவச கண்சிகிச்சை முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

  தொடர்ந்து மாலை 4 மணிக்கு மன்னார்புரம் விலக்கில், விவேக் முருகன் ஏற்பாட்டில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

  பாளை மகாராஜநகரில் உள்ள தனது இல்லத்தில் 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இணையவழியில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பி னர்கள் சேர்க்கும் பணியில் பணியாற்றி யோருக்கு பரிசுகள் வழங்குகிறார்.

  காமராஜர் பிறந்த நாளான நாளை காலை 7 மணிக்கு ரெட்டியார்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

  தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சுருளை கிராமத்திலும், 7.45 மணிக்கு முனைஞ்சிப்பட்டியிலும், 8மணிக்கு விஜயஅச்சம்பாட்டி லும், 9.15 மணிக்கு இட்ட மொழியிலும், 10 மணிக்கு பரப்பாடியிலும், 11.30 மணிக்கு களக்காட்டிலும், மதியம் 12.45 மணிக்கு சிதம்பராபுரத்திலும், மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திலும் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

  மாலை 4 மணிக்கு ஓமநல்லூர் மாலை 5 மணிக்கு மருதகுளம், 6 மணிக்கு கண்ணநல்லூர், இரவு 7.15 மணிக்கு இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

  16-ந் தேதி காலை 10 மணிக்கு குன்னத்தூர் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

  மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பு கபடி போட்டியை தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு ஆரைக்குளம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

  17-ந் தேதி காலை 10 மணிக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி வட்டக்குளத்தில் நடைபெறும் கூட்டாஞ்சோறு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, உணவு அருந்துகிறார். மாலை 6.30 மணிக்கு கே.டி.சி. நகர் மாதா மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.

  Next Story
  ×