தேனி மாவட்ட கோர்ட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்

தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
தேனி கோர்ட்டில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தேனி கோர்ட்டில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
Published on

தேனி:

தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி வாசன் ஐ கேர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தேனி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் வீரசிகாமணி, பாண்டியராஜன் உள்பட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு இலவசமாக கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com