நத்தத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

நத்தம்:

நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வேலம்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

இதற்கு வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராசு, நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதி குடகிப்பட்டி அழகர்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com