search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekanandha Kentram"

    • செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். அதில் 72பேருக்கு மருந்து வழங்கப்பட்டது. 42பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. 40பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கன்னி யாகுமரி விவேகானந்தா கேந்திரம், பிரானுார், பார்டர் மர வியாபாரிகள், சாமில் உரிமையாளா்கள் சங்கம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி தொழிலதிபர் படேல் குரூப்ஸ் அம்ரூத்படேல்மோகன் தலைமை தாங்கினார்.

    பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியா் ராஜன், தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய மாநில செயலாளா் மணிமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அதனைதொடா்ந்து ரமிளாமோகன், சாமில் உரிமையாளா்கள் சங்க நிர்வாகி காஞ்சனாபிரவீன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

    கேந்திர அன்பர்கள் கல்யாணக்குமார், கோமதிநாயகம், பேச்சிமுத்து நுாலகர் ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில் அரவிந்த் கண் மருத்துமனை மருத்துவா்கள் மற்றும் குழுவினா் கண் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் மொத்தம் சுமார் 230பேர் கலந்து கொண்டனா். அதில் 72பேருக்கு மருந்து வழங்கப்பட்டது.

    42பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. 40பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், கேந்திர தொ ண்டா்கள், சுபம் அமைப்புசாரா தொழி லாளா்கள் சங்க அலுவலக மேலாளா் கோபக்கு மார், சிவக்குமார், முத்து மாரியப்பன், சத்யபாமா சமூக ஆர்வலா்கள் செய்திருந்தனா்.

    ×