என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயம் கடும் பாதிப்பு"
- கண்ணங்குடி ஒன்றிய விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
- இது சம்பந்தமாக கோட்டாட்சியரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை கோட்டாட்சியரிடம் கண்ணங்குடி ஒன்றிய சேர்மன் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
அவற்றில் கூறியிருப்ப தாவது:-
கண்ணங்குடி ஒன்றியத்தில் பெரும் பகுதி மழை இன்றி விவசாயம் பொய்த்துவிட்டது. அதிலும் குறிப்பாக சித்தானூர், அனுமந்தகுடி, தத்தணி, திருப்பாக்கோட்டை, மனைவி கோட்டை போன்ற ஊராட்சிகளில் முழுமை யான மழை இன்றி பயிர்கள் கருகி விட்டது.
இதை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரி கள் நேரடியாக பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்கள். இருப்பினும் இதுவரை வறட்சி நிவாரணம் வழங்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளித்துவிட்டு கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சித்தனூர் சரவணன் மெய்யப்பன் கூறுகையில், 2022-23 ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரண நிதி கண்ணங்குடி ஒன்றியத்திற்கு வழங்கப்படவில்லை, மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களோடு சேர்த்து கண்ணங்குடி ஒன்றியத்திற்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால் தற்பொழுது கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு பிறகும் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை என்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.






