காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியல்

திருப்பத்தூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். குடிநீர் அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தர வலியுறுத்தினர்.
காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள்.
காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள்.
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டம்பூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிந்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூறி இப்பகுதி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளி டமும், மக்கள் பிரதி நிதிகளிடமும் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிைற வேற்றி தர வலியுறுத்தி யும் காட்டம்பூர் கிராம பெண்கள் மதுரை - திருப் பத்தூர் தேசிய இணைப்பு நெடுஞ் சாலை யில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து பேச்சு வார்த்ைத நடத்தினர். ஆனால் பலன் இல்லை.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மண்டல வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காட்டம்பூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. பல மாதங்களாக தெரு விளக்கு வசதியும், சாலை வசதியும் இல்லாமல் உள்ளது. எங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆடு- மாடு மேய்ச்சல் திடலில் தற்சமயம் போர் வெல் (ஆழ்குழாய் கிணறு) அமைக்கப் பட்டுள்ளது. அதனால் எங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் எந்த ஒரு பயன்பாடு இல்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகியிடம் எடுத்துரைத்தும் அதற்கான எந்த ஒரு மேல் நடவடிக் கையும் எடுக்கப் படாத காரணத்தினால் எங்கள் அடிப்படை தேவைகளை அரசின் உயர்மட்ட அதிகாரி கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com