search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
    X

    சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்தொகுப்பினை வழங்கினார்.

    கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

    • திருப்பத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சமூக நலம் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு அமைச் சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் வளைகாப்பு பொருள்கள் மற்றும் தனது சார்பில் சேலை, பாதாம் பருப்பு, ஹார்லிக்ஸ், பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் இவ்விழா வின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளை காப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டாரத் திற்குட்பட்ட மொத்தம் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்கள், கர்ப்பகால மாதம் முதல் தொடங்கி 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து சரியான மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது டன் தானும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், தேவ கோட்டை வருவாய் கோட் டாட்சியர் பால்துரை, சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவர் முத்து மாரியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், பேரூ ராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முக மது, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கோமதி சண்முகம், ராஜேஸ்வரி சேகர், சரண்யாஹரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×