என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை-ஒன்றிய தலைவர் உறுதி
- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தலைவர்உறுதி கூறினார்.
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேசுவரன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பேசுகையில், பொது நிதியிலிருந்து ரூ.4.87 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் 37 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனஅதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.
Next Story






