search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித மைக்கேல் கல்லூரி வெள்ளி விழா
    X

    விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோர் போராசிரியர்களுக்கு நினைவு பரிசு களை வழங்கினர். அருகில் கல்லூரி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், செயலர் பாத்திமாமேரி, தொழிலதிபர் லீமாரோஸ்மார்டின், பிரிட்ஜெட்நிர்மலா, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மற்றும் உள்ள னர்.

    புனித மைக்கேல் கல்லூரி வெள்ளி விழா

    • புனித மைக்கேல் கல்லூரி வெள்ளி விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
    • ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்றார்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது .இந்த கல்லூரியை என்ஜினீயர் மைக்கேல் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

    இந்த கல்லூரியின் வெள்ளி விழா செயலாளர் பாத்திமா மேரி தலை மையில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்புரையாற்றி னார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பளார் அரவிந்த், லீமா ரோஸ்மார்டின், கல்லூரி சி.இ.ஒ. எஸ்.பிரிட்ஜெட் நிர்மலா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆசி ரியர் தொழில் பயிற்சி கல்லூரியாக தொடங்கப் பட்டது இந்த கல்லூரி. நாளடைவில் பொறியியல் கல்லூரி ஆக வளர்ந்துள் ளது. இதன் மூலம் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இவர்கள் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாண விகளை பட்டதாரிகளாக்கி உள்ளார்கள்.

    பிற்பட்ட பகுதியில் இத்தகைய கல்லூரிகள் தொடங்குவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இங்கு படிக்க முடியும். கல்லூரிகளும் தரமான நவீன கல்வியை அளிக்க வேண்டும்.இதனால் அவர்களது வாழ்க்கையில் இதன் மூலம் ஒளி ஏற்ற முடியும்.

    இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து கல்விக்கான நல்ல பணிகளை செய்திட வேண்டும் என்று வாழ்த்து கிறேன். மிகவும் சிரமமான சூழ்நிலையில் பொறியாளர் மைக்கேல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்பொழுது வளர்ந்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் 25 ஆண்டுகளாக கல்லூரியில் பணியாற்றிய முதல்வர், பேராசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி னார்கள்.

    கல்லூரி முதல்வர் கற்பகம் நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடை பெற்றது. வெள்ளி விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் சேர்மன் டாக்டர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப் பாளர் விஸ்வநாதன் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜோன்ஸ்ருசோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×