என் மலர்
சிவகங்கை
சிவகங்கை நகர அ.தி.மு.க. செயலாளர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆனந்த் (வயது 53). கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலை தலைவராகவும் உள்ள இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிவகங்கையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக நகர செயலாளராக பணியாற்றி ஆனந்த் கொரோனாவுக்கு பலியானது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்துக்கு அஞ்சுகம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 13 பேருக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பின் தலைவர் பாரூக் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆக்கி, கால்பந்து, தடகளம், இறகுப்பந்து, சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்டத்தில் சாதனை படைத்த 13 வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் விருதுகளை வழங்கி பேசினார். விழாவில் சிவகங்கை இளைய மன்னர் மகேஷ் துரை, பேராசிரியர் அருளப்பன், டாக்டர் பழனிவேல்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கருவியை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிவதற்காக பல்வேறு இடங்களில் நடத்தப்படும் பரிசோதனைகள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு கொரோனா உள்ளதா இல்லையா என்று உறுதி செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் ஒரு பரிசோதனை எந்திரம் உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும்.
இந்தநிலையில் மருத்துவக்கல்லூரியை பார்வையிட வந்த சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் கூடுதலாக ஒரு பரிசோதனை கருவி இருந்தால் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ரூ. 15 லட்சத்து 69 ஆயிரத்து 400 மதிப்பில் ஒரு புதிய பரிசோதனை கருவியை வாங்கி கொடுத்துள்ளார். தற்போது இந்த பரிசோதனை கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையடுத்து சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு பொதுமக்கள், மருத்துவமனை சார்பில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் டாக்டர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதலாக ஒரு பரிசோதனை கருவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவ கல்லூரிக்கு மேலும் ஒரு பரிசோதனை கருவி வழங்க உத்தரவிட்டார். தற்போது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பரிசோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும் என்று மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 31-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தால் புரபேஷனரி அலுவலர் பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வுகள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 31-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பெற விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கையில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சிவகங்கை:
சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை நகர், காமராஜர் காலனி, சாமியார்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.'
பணம் தராமல் ஏமாற்றியதால் சித்தப்பா தலையை துண்டித்தோம் என்று போலீசில் சரணடைந்த அண்ணன் மகன்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காரைக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகமது. இவரது மகன்கள் சகுபர் அலி, யூசுப் ரகுமான் (வயது50). இவர்களுக்கு அங்கு பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு யூசுப் ரகுமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் கோழிக்கடை தொடங்கி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருடன் தந்தை செய்யது முகமதுவும் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கோட்டைப்பட்டினத்தில் உள்ள சொத்து தொடர்பாக யூசுப் ரகுமானுக்கும், அவரது அண்ணன் சகுபர் அலிக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அடிக்கடி இருவருக்குள் மோதல் ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது.
இதற்கிடையில் பொது சொத்துக்களை யூசுப் ரகுமான் விற்றுள்ளார். இது சகுபர் அலி மற்றும் அவரது மகன்கள் ரியாஸ்கான், ரகுமான்கான் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி யூசுப் ரகுமானிடம் கேட்டனர். ஆனால் அவர் சரியான பதிலை தரவில்லை. இதனால் அவர்களது கோபம் மேலும் அதிகரித்தது.
நேற்று இரவு சகோதரர்கள் ரியாஸ்கான், ரகுமான் கான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சித்தப்பா யூசுப் ரகுமான் வீட்டுக்கு வந்தனர்.
சொத்து தொடர்பாக அவர்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சித்தப்பா என்றும் பார்க்காமல் யூசுப் ரகுமானை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இருப்பினும் சகோதரர்கள் ரியாஸ்கான், ரகுமான்கானுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. யூசுப் ரகுமானின் தலையை தனியாக துண்டித்து எடுத்தனர்.
பின்னர் 2 பேரும் துண்டித்த தலையை பையில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறினர். அவர்களை அரிவாளை காட்டி மிரட்டிய சகோதரர்கள் நேராக சாக்கோட்டை போலீஸ் நிலையம் சென்று துண்டித்த தலையுடன் சரணடைந்தனர்.
போலீஸ் நிலையத்திற்கு தலையுடன் 2 பேர் வந்ததால் அங்கும் பதட்டம் ஏற்பட்டது. காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது கொலையாளிகள் ரியாஸ்கான், ரகுமான் கான் ஆகியோர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் எங்களுக்கு குடும்ப சொத்து உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துக்களை சித்தப்பா யூசுப் ரகுமான் தனது வீட்டில் இருந்த தாத்தா செய்யது முகமதுவை ஏமாற்றி மோசடியாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுதொடர்பாக அவரிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை.
மேலும் அதில் சில சொத்துக்களை தன்னிச்சையாக விற்று விட்டார். இதில் எங்களுக்குரிய பணத்தை தாருங்கள் என கேட்டபோது பணம் தராமல் இழுத்தடித்தார். நேற்றும் அவரிடம் பங்கு தொகை பணம் கேட்டோம். ஆனால் அவர் சரியான பதிலை கூறவில்லை. இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. இனியும் சித்தப்பா பணம் தர மாட்டார் என கருதியதால் அவரை வெட்டிக்கொலை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொலை செய்யப்பட்ட யூசுப் ரகுமானுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

காரைக்குடி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை தலையை துண்டித்து கொலை செய்த மகன்கள், அந்த தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் ரகுமான் (வயது 45). இவர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது.
இது தொடர்பாக அவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சகுபர் அலியின் மகன்கள் ரியாஸ் கான் (36), ரகுமான் கான் (31) ஆகியோர் சொத்து பிரச்சினை தொடர்பாக தனது சித்தப்பா யூசுப் ரகுமானை நேற்று இரவில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ரியாஸ் கான் மற்றும் அவரது தம்பி ரகுமான்கான் ஆகிய 2 பேரும் சேர்ந்து தனது சித்தப்பா என்று கூட பாராமல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டி யூசுப் ரகுமானின் தலையை துண்டித்தனர்.
பின்னர் துண்டித்த தலையுடன் சாக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தனர். துண்டிக்கப்பட்ட தலையுடன் 2 பேர் வந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் உடலையும், தலையையும் போலீசார் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 மகன்களே சித்தப்பாவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கீழடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் இந்த பகுதியில் பணிகள் நடைபெறவில்லை.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது, கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்களின் நாகரிகம் மற்றும் வாழ்க்கை வரலாற்று முறைகளை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏராளமான அரிய பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கீழடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் இந்த பகுதியில் நேற்று பணிகள் நடைபெறவில்லை.
மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் குழிகளில் போட்டிருந்த தார்ப்பாய்களை அப்புறப்படுத்தி அந்த குழியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 129 பேர் கொரோனா தொற்றுடன்சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 25 பேர் நேற்று வீடு திரும்பினர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 484 ஆக இருந்தது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 58 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 955 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்து குவிந்துள்ள பறவைகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர்-மதுரை சாலையில் வேட்டங்குடி உள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் கொள்ளுக்குடிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஐரோப்பா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் கூட்டமாக வந்து இங்குள்ள மரத்தில் கூடுகட்டி தனது பறவை இனத்தை அதிகரித்து செல்லும்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிக அளவு மழைபெய்வதால் இந்த மாதங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இந்த கண்மாய்க்கு வந்து இங்குள்ள மரங்களில் கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடைக்காத்து குஞ்சுகளை பொரிக்கும்.
இதையடுத்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு இந்த பறவைகள் ஆண்டுதோறும் தவறாமல் வந்து சென்றால் அந்த ஆண்டுகளில் விவசாயம் செழிப்பாக இருக்கும் என கிராம மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் முதலே இந்த பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் இந்த பகுதியில் உள்ள கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே இங்கு பறவைகள் வரத்து கடந்த 2 மாதமாக அதிகரித்து உள்ளது.
இங்கு பாம்புதாரா, கொக்கி நாரை, மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 வகையான பறவைகள் தற்போது வந்து கூடு கட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்தாண்டு இங்கு வரும் பறவைகளை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என சரணாலயத்திற்கு செல்லும் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில் இங்கு வந்துள்ள பறவைகளை பார்வையிடுவதற்கும் போதிய கட்டுப்பாடுகளோடு வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள வாணியங்காடு, தென்மாபட்டு காட்டாம்பூர், தேவரம்பூர், தானிப்பட்டி, பட்டாகுறிச்சி, பிராமணம்பட்டி, குண்டேந்தல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கண்மாயில் குடிமராமத்து பணியை நாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கண்மாய் மூலம் 9 கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்த கண்மாயை தூர்வார வேண்டும் என்று 9 கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசு ரூ.96 லட்சம் ஒதுக்கியது, இதையடுத்து குடிமராமத்து பணியை மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவசிவ ஸ்ரீதரன், பாசன சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதாஅண்ணாத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ் நேசன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, நீர் மேலாண்மை குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலா, தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.