என் மலர்
செய்திகள்

மாவட்டத்தில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் விருது வழங்கி பாராட்டிய போது எடுத்த படம்
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 13 பேருக்கு விருது - கலெக்டர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 13 பேருக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பின் தலைவர் பாரூக் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆக்கி, கால்பந்து, தடகளம், இறகுப்பந்து, சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்டத்தில் சாதனை படைத்த 13 வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் விருதுகளை வழங்கி பேசினார். விழாவில் சிவகங்கை இளைய மன்னர் மகேஷ் துரை, பேராசிரியர் அருளப்பன், டாக்டர் பழனிவேல்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






