என் மலர்tooltip icon

    சேலம்

    • அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 342 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • தற்போது அணையில் 91.49 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அதன் படி நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. ஆனாலும் மேட்டூர் அணையில் இருந்து நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக குறைந்து காணப்பட்டது.

    அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 342 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.49 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர்.
    • ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர்.

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார்.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாம் தொலைக்காட்சிகளை பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலரில் பஸ் எடுத்து செல்கின்றனர். ஒருவர் பச்சை கலர் பஸ்சிலும், ஒருவர் மஞ்சள் கலர் பஸ்சிலும் செல்கின்றனர். நான் கூறுகிறேன், கடைசியாக எல்லாத்தையும் 'ஓவர்டேக்' செய்து வெற்றி பெறுவது பிங்க் கலர் பஸ்தான். இது மகளிர்களான நீங்கள் பயன்படுத்தும் முதலமைச்சரின் அந்த 'பிங்க் கலர்' பஸ் தான் மற்ற எல்லா பஸ்களையும் ஓரம் கட்டிவிட்டு வெற்றி பெறும் என்றார்.

    • இரண்டு பாமக எம்.எல்.ஏ.-க்கள் ஒற்றுமையாக பாராட்டியுள்ளனர்.
    • அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும்.

    சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கி பேசினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    இங்கு நடப்பது அரசு விழாவா? மகளிர் விழாவா? என்ற அளவிற்கு எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு வந்துள்ளீர்கள். இந்த விழாவிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் நம்முடைய இயக்கம் கிடையாது. நம்முடைய கூட்டணியில் கூட (இப்போது) கிடையாது.

    சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகிய இருவரும், சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பாராட்டுகள் என போட்டி போட்டு கொண்டு பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 564 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.71 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 564 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே போல மற்ற இடங்களுக்கும் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    பிற்பகல் 3 மணியளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மறு சீராய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வருகிறார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பல ஆயிரம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதன் காரணமாக மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கிருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.

    பின்னர் மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதியும், 3-வது முறையாக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதியும், ஜூலை 25-ந் தேதி 4-வது முறையாகவும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி 5-வது முறையாகவும், கடந்த 2-ந் தேதி 6-வது முறையாகவும் நிரம்பியது.

    இதற்கிடையே மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அணைக்கு வரும் நீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 228 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் இந்தாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் தற்போது 93.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 92.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 13 ஆயிரத்து 862 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    இதே போல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 92.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
    • மேட்டூர் அணையில் தற்போது 93.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    அதன்படி இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.73 அடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.04 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது.
    • மேட்டூர் அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது. இதனால் அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 30 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 23 ஆயிரத்து 300 கனஅடியாக குறைந்தது. இதே போல் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மே ற்கு பருவமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 10 மணி முதல் மீண்டும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு வழி பாதையை ஏற்படுத்தி கொடுத்து நிலத்தில் விவசாயம் செய்ய உதவ வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆடையூர் கிராம பகுதியை சேர்ந்த குமார் (45). இவரது மனைவி சாந்தி மற்றும் குமாரின் தந்தை மாணிக்கம் (70), தாய் ஸ்ரீரங்காயி (65) ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து ஊற்றி 4 பேரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். தீப்பெட்டி எடுத்து பற்ற வைக்க முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 4 பேரிடமும் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமார் கூறியதாவது:-

    எங்களுக்கு சொந்த ஊரில் 1ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் எங்கள் நிலத்திற்கு அருகாமையில் 1.48 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த வழியாக எங்கள் நிலத்திற்கும் மற்றும் வெளியே செல்வதற்கும் வழித்தடமாக கடந்த 60 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தோம்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த வழியாக செல்லக்கூடாது, விவசாயம் செய்யக்கூடாது எனக்கூறி மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் எனது தாயையும் பயங்கரமாக தாக்கினர். இதில் எனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தோம் இதுவரை நடவடிக்கை இல்லை.

    எங்களால் வெளியே செல்வதற்கு வழியில்லாமலும், விவசாயம் செய்வதற்கும் வழி இன்றி தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு வழி பாதையை ஏற்படுத்தி கொடுத்து நிலத்தில் விவசாயம் செய்ய உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார்.
    • வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    சேலம்:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்போனில் மூழ்கி கிடந்த அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகுல் கல்லூரியில் படிப்பதாக கூறி உள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறியும் வந்துள்ளனர்.

    இந்த நிலையில் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து தனக்கு ஈரோடு என்று கூறிய ராகுல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தால் நேரில் சந்திக்கலாம் என்று அந்த மாணவியிடம் கூறினார்.

    இதனை நம்பிய மாணவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். தொடர்ந்து இரவு 9.45 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர் ராகுலை சந்தித்தார். ரெயில் நிலையம் முன்புள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்ததும் தான் கழிவறைக்கு சென்று வருவதாக மாணவி, ராகுலிடம் கூறினார். அப்போது தனது கைப்பையை ராகுலிடம் அந்த மாணவி கொடுத்தார்.

    அப்போது கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி தான் அணிந்திருந்த 3 பவுன் எடை கொண்ட 3 வளையல்கள், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி அந்த கைப்பையில் வைத்தார்.

    மேலும் தனது செல்போன், லேப்டாப்பையும் அந்த கைப்பையில் வைத்து ராகுலிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது ராகுல் அந்த கைப்பையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கதறினார்.

    மேலும் வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தனது தந்தைக்கு மாணவி தகவல் தெரிவித்தார். இதனால் கதறிய படி சேலம் வந்த அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியுடன் பழகி சேலத்திற்கு வரவழைத்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற ராகுலை அவரது போட்டோவை வைத்து தேடி வருகிறார்கள். மேலும் அவரது உண்மையான பெயர் ராகுலா அல்லது வேறு பெயர் கொண்டவர் இந்த பெயரை சொல்லி ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.

    ×