என் மலர்
சேலம்
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
- மூதாட்டியை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த மூதாட்டி 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
- பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.
இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
- அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்
27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரை அறை
எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
- 200 ஆண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, வங்காநரி வழிபாடு நடைபெற்று வருகிறது.
- இதேபோல் நேற்று மாலை சின்னம நாயக்கன்பா ளையம் கிராம மக்கள், வங்காநரி பிடித்துச் சென்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சி.என்.பாளையம், ரங்கனுார், சி.கி.புரம், பெ.கி.புரம், தமையனுார் உள்ளிட்ட கிராமங்களில், 200 ஆண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும்
பொங்கலன்று, வங்காநரி
வழிபாடு நடைபெற்று வரு கிறது. காணும் பொங்க லன்று கிராமத்தை யொட்டியுள்ள தரிசு நிலங்களில் வலை விரித்து காத்திருந்தும் கிராம மக்கள் வங்காநரி பிடித்து, தாரை, தப்பட்டை மேள வாத்தியங்கள் முழங்க
கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபடுகின்றனர்.
வங்காநரி, பாது காக்கப்பட வேண்டிய வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியைப் பிடித்து வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. ஆனாலும் இந்த வழிபாட்டு முறையை கைவிட மனமில்லாத கிராம மக்கள் தொடர்ந்து வங்காநரி வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தி
னம் கொட்டவாடி கிராம
மக்கள்,வங்காநரி பிடித்து, கிரா மத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல் நேற்று மாலை சின்னம நாயக்கன்பா ளையம் கிராம மக்கள், வங்காநரி பிடித்துச் சென்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர்.
இது குறித்து தகவ லறிந்த வாழப்பாடி வனத்துறை யினர், வங்காநரிகளை மீட்டு, இதன் வாழ் இடமான தரிசு நிலப்பகுதியில் விட்டனர்.
- அணையிலிருந்து காவிரி ஆற்றில் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1022 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 883 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 108.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை மேலும் சரிந்து 107.79 அடியானது. இதனால் இனிவரும் நாட்களில் நீர்வரத்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
- வைர முனீஸ்வரன் கோவில் பூசாரி மாரியப்பன் சாமி ஆடியபடி பட்டாகத்தி மீது ஏரி நின்றும் கத்தி மீது நடந்தும் 500 மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை வந்து அடைந்தார்.
- வைர முனீஸ்வரன், காசி கால பைரவர் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி பகுதியில் எழுந்தருளிய காசி காலபைரவர், வைரமுனிஸ்வரர் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு சரபங்கா ஆற்றில் இருந்து புனித தீர்த்தம், பூங்கரகம் எடுத்து கொண்டு பம்பை மேளம் முழங்க வரும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது வைர முனீஸ்வரன் கோவில் பூசாரி மாரியப்பன் சாமி ஆடியபடி பட்டாகத்தி மீது ஏரி நின்றும் கத்தி மீது நடந்தும் 500 மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை வந்து அடைந்தார்,
அப்போது கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் குழந்தை வரம், தொழில் முன்னேற்றம், வேண்டி வணங்கியவர்களுக்கு தன்னிடம் இருந்த எலுமிச்சை கனியை கொடுத்து ஆசி வழங்கினார். பிறகு கத்தி மீது இருந்து இறங்கி கோவிலுக்குள் சென்றார்.
தொடர்ந்து வைர முனீஸ்வரன், காசி கால பைரவர் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரின் உன்னதமான திட்டம்.
- கோவில்களில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணங்கள் நடத்தப்படுவதில்லை.
சேலம்:
தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்த அவர் தரமாக இருப்பதாக கூறினார். மேலும் உணவை மாணவ -மாணவிகளுக்கு பரிமாறினார். தொடர்ந்து உணவு சமைத்து எப்படி பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரின் உன்னதமான திட்டம். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளை சேர்ந்த 5444 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். முதல்-அமைச்சர் அறிவித்தபடி 2023 -2024 -ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி திறன் அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது . முதல்-அமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் அங்கு இருந்தே இங்கு தயாரிக்கப்படும் உணவு கொண்டு செல்லப்படும் விதம், மாணவர்களுக்கு சாப்பாடு வழங்குவது உட்பட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களையும் பள்ளியில் சேர்த்து இந்த திட்டத்தில் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை திருமணங்கள் சில மாவட்டங்களில் நடைபெறுகிறது. 18 வயதுக்கு குறைவான திருமணங்கள் அனைத்தும் குழந்தை திருமணங்கள் தான் . அவை சம்பந்தப்பட்டவர்கள் மூலமாகவும் ,வேறு நபர்கள் அளிக்கும் தகவல் மூலமாகவும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணங்கள் நடத்தப்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி, மாநகர தி.மு.க. செயலாளர் ரகுபதி, வார்டு கவுன்சிலர் சங்கீதா நீதி வர்மன், முன்னாள் வார்டு செயலாளர் நீதி வர்மன், மதுசூதனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
- இந்த பணத்தை கார்த்திக், சரவணனிடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த வர் சுதாகர் (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது அண்ணன் கார்த்திக்.
இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சரவணன் (40) என்பவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இந்த பணத்தை கார்த்திக், சரவணனிடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன், நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் வீட்டிற்கு வந்தார். அங்கு நின்ற சுதாகரிடம் உன்னுடைய அண்ணன் எங்கே என்று கேட்டுள்ளனர். அவர் வெளியில் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். உங்கள் அண்ணன் கொடுத்த பணத்தை தரமுடியாது என கூறி சுதாகரை கட்டையால் தாக்கினர். இதில் சுதாகரின் மண்டை உடைந்தது. வலிதாங்க முடியமல் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த சுதாகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனார்.
இதுகுறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுதாகரை தாக்கிய கும்பலை தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த சரவணன் போலீ சாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வரு கின்றனர்.
- ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது.
- இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
சேலம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜாகீர் அம்மாபாளைத்தில் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் துணை மேயரும், மெய்யனூர் பகுதி செயலாளருமான கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் தி.மு.கவினர் மற்றும் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளாப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
- தமிழ்நாடு அமைச்சரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார்.
சேலம்:
தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் முடக்கி வைத்திருக்கிறார்.
இது தமிழ்நாடு அரசுக்கு விரோதமானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் எதிரானது. எனவே ஆளுநரை பதவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் கிழக்க மாவட்ட காங்கிரஸ், வீரபாண்டி சட்டமன்றம் சார்பில் இரும்பாலை 2-வது கேட்டில் மாவட்டத் தலைவர் அர்த்தனாரி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரபாண்டி வடக்கு வட்டார தலைவர் செட்டியார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மூடுதுறை கனகராஜ், அமைப்புசாரா மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.பி.கிருஷ்ணா, வீரபாண்டி தெற்கு வட்டார தலைவர் ஆட்டையாம்பட்டி சாமி, பனமரத்துப்பட்டி மேற்கு வட்டார தலைவர் வெங்கடேஷ், ஏற்காடு வட்டார தலைவர் ஜெய்ஆனந்த், சேலம் வட்டார தலைவர் செல்வ குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரீத்தா, இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவு தலைவர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஐ.என்.டி.சி தேவராஜ், கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் கார்த்தி, வட்ட முத்தம்பட்டி சேகர், பொன்னுசாமி, ஜெயபால், சேகர், அறிவழகன், சேவி, வீரமுத்து, நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், தீனதயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஆத்தூர் மணிக்கூண்டு அருகிலும், தலைவாசல் தபால் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சேலம்:
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்.ராஜரத்தினம் ஆகியோர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று காலை சேலம் ஜெ.எம்.1 கோர்ட்டில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு (தற்போது தி.மு.க.வில் உள்ளார்), மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி ஆகியோர் நீதிபதி கலை
வாணி முன்பு ஆஜரா னார்கள். மூத்த வழக்கறி ஞர்கள் வக்கீல் விஜயராசா, குமார், கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித்தொழிலின் மையமாகத் திகழ்கிறது. துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.
இங்கு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.
இங்கு நடைபெறும் ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறும்.
2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.
தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்று உள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும் வெற்றி பெற்றனர்.
2011 தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தே.மு.தி.க.வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.
இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1546 வாக்குகளும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்து குமரனுக்கு 1204 வாக்குகளும் கிடைத்தது.
திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது இந்த தொகுதிக்கு முதல்முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 ஓட்டு வித்தியாசத்தில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இந்தநிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்தார். அதே போல் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த அ.தி.மு.க. கூட்டணியும் எப்படியும் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்க சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.






