என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமநாயக்கன் பாளையத்தில் வங்காநரி வழிபாடு
    X

    வனத்துறையினர் நரியை மீட்டபோது எடுத்தபடம்.

    சின்னமநாயக்கன் பாளையத்தில் வங்காநரி வழிபாடு

    • 200 ஆண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, வங்காநரி வழிபாடு நடைபெற்று வருகிறது.
    • இதேபோல் நேற்று மாலை சின்னம நாயக்கன்பா ளையம் கிராம மக்கள், வங்காநரி பிடித்துச் சென்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சி.என்.பாளையம், ரங்கனுார், சி.கி.புரம், பெ.கி.புரம், தமையனுார் உள்ளிட்ட கிராமங்களில், 200 ஆண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும்

    பொங்கலன்று, வங்காநரி

    வழிபாடு நடைபெற்று வரு கிறது. காணும் பொங்க லன்று கிராமத்தை யொட்டியுள்ள தரிசு நிலங்களில் வலை விரித்து காத்திருந்தும் கிராம மக்கள் வங்காநரி பிடித்து, தாரை, தப்பட்டை மேள வாத்தியங்கள் முழங்க

    கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபடுகின்றனர்.

    வங்காநரி, பாது காக்கப்பட வேண்டிய வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியைப் பிடித்து வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. ஆனாலும் இந்த வழிபாட்டு முறையை கைவிட மனமில்லாத கிராம மக்கள் தொடர்ந்து வங்காநரி வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தி

    னம் கொட்டவாடி கிராம

    மக்கள்,வங்காநரி பிடித்து, கிரா மத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.

    இதேபோல் நேற்று மாலை சின்னம நாயக்கன்பா ளையம் கிராம மக்கள், வங்காநரி பிடித்துச் சென்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர்.

    இது குறித்து தகவ லறிந்த வாழப்பாடி வனத்துறை யினர், வங்காநரிகளை மீட்டு, இதன் வாழ் இடமான தரிசு நிலப்பகுதியில் விட்டனர்.

    Next Story
    ×